அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டி மிகப்பெரிய ரயில் பாதை திட்டத்தை தொடங்கும் சீனா..!

2 November 2020, 2:00 pm
Trian_Tibetan_Plateau_UpdateNews360
Quick Share

இந்தியாவுக்கு கவலையளிக்கும் ஒரு விசயமாக, அருணாச்சல பிரதேசத்தின் எல்லைக்கு அருகில் சிச்சுவான் திபெத் ரயில் பாதை கட்டுமானத்தை சீனா விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்திற்கு அருகில் சிச்சுவான்-திபெத் ரயில் பாதை அமைய உள்ளது பாதுகாப்பு ரீதியாக சீனாவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது. முழு அருணாச்சலப் பிரதேசத்தின் மீதும் உரிமை கொண்டாடும் சீனா, அதை தெற்கு திபெத் என்று அழைக்கிறது. எனினும் இந்த கோரிக்கையை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திபெத்தின் லின்ஷிக்கும் தென்மேற்கு சிச்சுவானில் யானுக்கும் இடையே ரயில் பாதை அமைய உள்ளது. இது சிச்சுவானின் தலைநகரான செங்டுவிலிருந்து தொடங்கி லாசாவுக்குச் செல்ல எடுக்கும் நேரத்தை 48 மணி நேரத்திலிருந்து 13 மணி நேரமாகக் குறைக்கும்.

இந்த திட்டத்தின் மொத்த செலவு சுமார் 47.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

இது திபெத்திய பீடபூமியில் சீனாவின் இரண்டாவது பெரிய ரயில் திட்டமாகும். சீனா ஏற்கனவே புவியியல் ரீதியாக உலகின் மிகவும் உயரமான பீடபூமியான திபெத்தில் கிங்காய் திபெத் ரயில் பாதையை கட்டமைத்து செயல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 41

0

0

1 thought on “அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டி மிகப்பெரிய ரயில் பாதை திட்டத்தை தொடங்கும் சீனா..!

Comments are closed.