ஸ்பெயினில் அமைச்சரவையை பதம் பார்த்த கொரோனா..! துணை பிரதமர் உள்ளிட்ட 3 அமைச்சர்களுக்கு பாதிப்பு உறுதி..!

26 March 2020, 12:13 am
Spain_Deputy_PM_UpdateNews360
Quick Share

ஸ்பெயினின் துணைப் பிரதமர் கார்மென் கால்வோவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

62 வயதான கால்வோ ஞாயிற்றுக்கிழமை முதல் சுவாச நோய்த்தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் முன்பு ஒருமுறை கொரோனா சோதனை செய்ததில், தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டிருந்தது.

மற்ற இரண்டு அமைச்சர்களுக்கும் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. ஸ்பெயினில் பெரிய கூட்டங்கள் தடை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அமைச்சர்கள் இருவரும், கால்வோவுடன் சேர்ந்து, மார்ச் 8 அன்று மாட்ரிட்டில் நடந்த ஒரு பெரிய சர்வதேச மகளிர் தின அணிவகுப்பில் கலந்து கொண்டனர், .

பிரதமர் சான்செஸின் மனைவியும் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டார். மார்ச் 14 அன்று அவருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

செவ்வாயன்று, சான்செஸ் வசிக்கும் மற்றும் வேலை செய்யும் மோன்க்ளோவா அரண்மனை கிருமி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கால்வோவின் கடைசி பொது தொடர்பு சான்செஸுடன் கடந்த வாரம் ஆரம்பத்தில் இருந்தது என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து ஸ்பெயின் பிரதமருக்கும் முன்னெச்சரிக்கையாக கொரோனா சோதனை செய்யப்படலாம் என பேசப்படுகிறது.

Leave a Reply