மலேசியாவில் உச்சம் தொட்ட கொரோனா : இதுவரை 10 லட்சம் பேர் பாதிப்பு!!

Author: Udayachandran
26 July 2021, 5:01 pm
Malaysia Corona - Updatenews360
Quick Share

மலேசியா : தினசரி கொரோனா பாதிப்பு மலோசியாவில் அதிகரித்து வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது.

மலேசியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று 15,902 ஆக இருந்த பாதிப்பு நேற்று முன்தினம் 15,573 ஆகவும் இருந்தது.

மலேசியாவில் தேசிய அளவிலான பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இருப்பினும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 13-ம் தேதி முதல் தொடா்ந்து 10 ஆயிரத்தை தாண்டி வருகிறது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,045 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சம் தொட்டுள்ளது.

நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,13,438 ஆக உயர்வடைந்துள்ளது. 92 பேர் உயிரிழந்துள்ளதால் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,994 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேபோல், 8.44 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இதுவரை அந்நாட்டில் 4 லட்சத்து 17 ஆயிரத்து 738 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன

Views: - 227

0

0