பிரிட்டிஷ் மெய்க்காப்பாளருடன் கள்ளக்காதல்..! துபாய் மன்னரின் ஆறாவது மனைவி குறித்து “ஷாக்” தகவல் அம்பலம்..!

23 November 2020, 9:17 pm
Dubai_King_Wife_UpdateNews360
Quick Share

துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது அல் மக்தூமின் ஆறாவது மனைவியாக இருந்த இளவரசி ஹயா, தனது இரண்டு வருட கள்ள உறவு குறித்து வெளிப்படுத்தாமல் இருக்க, பிரிட்டிஷ் மெய்க்காவலராக இருக்கும் தனது காதலருக்கு சுமார் 12 கோடி ரூபாய் செலுத்தியதாக ஒரு அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துபாய் அரச குடும்ப மெய்க்காப்பாளர்களுக்கும் இதேபோன்ற தொகையை ஹயா செலுத்தியுள்ளார். இந்த விவகாரம் பற்றி வெளிப்படுத்தாமல் இருக்க அவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவர் ஜோர்டானின் மறைந்த மன்னரின் 46 வயதான மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 37 வயதான ரஸ்ஸல் பிளார்ஸ் அவரது பிரிட்டிஷ் காதலர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு பணம் மட்டுமல்லாது சுமார் 12 லட்சம் மதிப்புள்ள வாட்ச் மற்றும் ரூ 49 லட்சம் மதிப்புள்ள விண்டேஜ் ஷாட்கன் போன்ற ஆடம்பரப் பொருட்களையும் வழங்கியுள்ளார்.

லண்டனின் உயர்நீதிமன்றத்தில் தனது கணவருக்கு எதிராக இளவரசி ஹயாவின் குழந்தை குறித்த விசாரணையின் போது இந்த ரகசிய விவகாரம் வெளிப்படையாக வெளிவந்தது.

ரஸ்ஸல் வேல்ஸ் ராயல் ரெஜிமென்ட்டில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினர். அவர் 2016’ஆம் ஆண்டில் இளவரசிக்கு முழுநேர வேலை செய்யத் தொடங்கினார். மேலும் பல வெளிநாட்டு பயணங்களில் அவருடன் சென்றுள்ளார்.

இந்த கள்ளக்காதல் விவகாரம் ரஸ்ஸலின் நான்கு வருட திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.

குறிப்பிடத்தக்க வகையில், இளவரசி இரண்டு வருட விவகாரம் குறித்து கூறப்படும் பல கூற்றுக்களை நிராகரிக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

கணவரான துபாய் ஆட்சியாளருக்கு இந்த விவகாரம் தெரியவந்ததை அடுத்து, இளவரசி தனது இரண்டு குழந்தைகளுடன் துபாயில் உள்ள தனது வீட்டிலிருந்து லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார்.
இளவரசி மற்றும் அவரது குழந்தைகள் இப்போது லண்டனில் கென்சிங்டனில் சுமார் 850 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.

Views: - 22

0

0