அமெரிக்காவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5 ஆகப் பதிவு…!!

13 November 2020, 8:24 pm
earthquake - updatenews360
Quick Share

வாஷிங்டன்: அமெரிக்காவில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நெவாடா மினா பகுதியில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5 ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. நெவாடா மினா பகுதியின் தென்கிழக்கே 34 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு நெவாடா மற்றும் கலிபோர்னியாவின் சியரா மலைப்பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 20

0

0