சவூதியிடம் மூக்குடைந்த பாகிஸ்தான்..! பாகிஸ்தான் ராணுவத் தளபதியை சந்திக்க பட்டத்து இளவரசர் மறுப்பு..!

19 August 2020, 11:58 am
Saudi_Arabia-Pak_Army_Chief_UpdateNews360
Quick Share

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்திக்கும், பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவின் முயற்சி தோல்வியைத் தழுவியதால், சவுதி அரேபியா இம்ரான் கானின் பாகிஸ்தானுடன் உறவுகளை சரிசெய்ய அவசரப்படவில்லை என்று தெரிகிறது.

பஜ்வா பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ தலைவருடன் நேற்று சவுதி அரேபியா வந்திருந்தார்.

காஷ்மீர் பிரச்சினையில் சவூதி அரேபியா இந்தியாவுக்கு எதிராக செயல்பட மறுத்த பின்னர், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி சவுதி அரேபியாவுக்கு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மிக மோசமான நிலையை எட்டியுள்ளன.

இந்தியா 370’வது பிரிவை ரத்து செய்த முதல் ஆண்டு நிறைவில் பேசிய குரேஷி, காஷ்மீர் குறித்து விவாதிக்க இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (ஓஐசி) வெளியுறவு அமைச்சர்கள் (சிஎஃப்எம்) கூட்டத்தை ஏற்பாடு செய்வது குறித்து பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கவில்லை என்று சவூதி அரேபியாவை பகிரங்கமாக விமர்சித்திருந்தார்.

காஷ்மீர் குறித்து விவாதிக்க சி.எஃப்.எம் கூட்டத்தை கூட்டாவிட்டால், காஷ்மீர் பிரச்சினையில் தன்னுடன் நிற்கவும், ஒடுக்கப்பட்ட காஷ்மீர் முஸ்லீம்களை ஆதரிக்கவும் தயாராக இருக்கும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டத்தை கூட்ட பாகிஸ்தான் கட்டாயப்படுத்தப்படும்.” என்றும் அவர் கூறினார்.

“இன்று பாகிஸ்தான், மக்கா மற்றும் மதீனாவுக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்ய எப்போதும் தயாராக உள்ளது. காஷ்மீர் பிரச்சினையில் சவூதி அரேபியா ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் இதை முன்னெடுக்க விரும்பவில்லை என்றால், பிரதமர் இம்ரான் கானிடம் சவூதி அரேபியா இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து முன்னேறுமாறு நான் கேட்டுக்கொள்வேன்.” என்று மேலும் தெரிவித்திருந்தார்.

சவூதி அரேபியாவைத் தவிர, காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்காததற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸையும் பாகிஸ்தான் தாக்கியது.

இந்நிலையில் குரேஷியின் அறிக்கை சவூதி அரேபியாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து இனி பாகிஸ்தானுக்கு கடன்கள் அல்லது எண்ணெய் வழங்கல் இருக்காது என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. மேலும் 2018 நவம்பரில் சவூதி அறிவித்த 6.2 பில்லியன் அமெரிக்க டாலர் தொகுப்பின் ஒரு பகுதியாக இருந்த 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடனைத் திருப்பித் தருமாறு பாகிஸ்தானிடம் கேட்டுக்கொண்டது.

இதையடுத்து பாகிஸ்தான் சீனாவிடம் கடன் வாங்கி அந்தத் தொகையை திருப்பிச் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாகிஸ்தான் அரசியல் தலைவர்களின் செயலால் இஸ்லாமிய நாடுகளிடமிருந்து பாகிஸ்தான் தனித்து விடப்படும் அவளை நிலையைத் தடுக்கவும், சவூதி அரேபியாவை சமாதானப்படுத்தவும் பாகிஸ்தானின் உண்மையான ஆட்சியாளர்களாகக் கருதப்படும் ராணுவத்தின் தளபதி, ஐஎஸ்ஐ தலைவருடன் சவூதி விரைந்தார்.

ஆனால் சவுதியின் பட்டத்து இளவரசர் பாகிஸ்தான் மீது கடும் கோபத்தில் இருப்பதால் அவரை சந்திக்க மேற்கொண்ட முயற்சியில் பாகிஸ்தான் ராணுவத் தளபதிக்கு தோல்வியே மிஞ்சியுள்ளது.

Views: - 0 View

0

0