குண்டுவெடிப்பில் சிக்கி காயம்..! மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் மீது கொலை முயற்சியா..?

7 May 2021, 6:28 pm
Mohamed_Nasheed_UpdateNews360
Quick Share

மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் நேற்று இரவு குண்டு வெடிப்பில் சிக்கி காயமடைந்தார்.

மாலத்தீவின் மஜ்லிஸ் எனும் பாராளுமன்றத்தின் தற்போதைய சபாநாயகராகவும் உள்ள முகமது நஷீத்தின் கார் அருகே இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. உள்ளூர் ஊடகங்களின் அறிக்கையின்படி, அவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், “சபாநாயகர் முகமது நஷீத் மீதான தாக்குதலால் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அவர் விரைவாக குணமடைய விரும்புகிறேன். அவர் ஒருபோதும் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்.

இது போன்ற கோழைத்தனமான தாக்குதல்களுக்கு நம் சமூகத்தில் இடமில்லை என்று மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் கண்டித்துள்ளார்.

“முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இதுபோன்ற கோழைத்தனமான தாக்குதல்களுக்கு நம் சமூகத்தில் இடமில்லை. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் முன்னாள் ஜனாதிபதி நஷீத் மற்றும் இந்த தாக்குதலில் காயமடைந்த மற்றவர்களுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் உள்ளன” என்று அவர் மேலும் கூறினார்.

ஆதாரங்களின்படி, அவரது இல்லத்திற்கு அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு குறித்து மாலத்தீவு காவல் சேவை இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ் இந்த விவகாரம் மிகவும் தீவிரமாக நடத்தப்பட்டு வருவதாகவும், தற்போது விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

“நாடாளுமன்ற சபாநாயகர் முகமது நஷீத் தற்போது மாலேவில் உள்ள ஏ.டி.கே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று இரவு அவரது இல்லத்திற்கு வெளியே ஏற்பட்ட குண்டு வெடிப்பில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக நடத்துகிறோம், தற்போது விசாரணை நடந்து வருகிறது” என்று அவர் ஒரு ட்வீட்டில் நேற்று தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட புகைப்படங்கள் சம்பவ இடத்தில் சிதைந்த மோட்டார் சைக்கிளைக் காட்டின. ஆனால் குண்டுவெடிப்பு ஒரு கொலை முயற்சி என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

குண்டுவெடிப்பு தலைநகர் முழுவதும் கேட்டதாக மாலே நகரில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மாலத்தீவில் திடீர் உருவாகியுள்ளது.

Views: - 181

0

0