கொரோனா வைரஸ் தாக்குதல்… முதல்முறையாக ஜப்பானியர் பலி!

13 February 2020, 9:45 pm
corona 01 updatenews360
Quick Share

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு, முதல்முறையாக ஜப்பானில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்தாண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், மற்ற உலக நாடுகளுக்கும் பரவி வருகிறது. கொவிட் – 19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரசுக்கு சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துவிட்டது. பல ஆயிரம் பேர் நோய் பாதிப்பால் சிக்கித் தவித்து வருகின்றனர்.

ஜப்பானினும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. முதல்முறையான இந்த நோய்க்கு ஜப்பானியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்; இதை அந்த நாட்டு அரசு உறுதி செய்துள்ளது. மேலும் 250க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

ஏற்னவே அங்கு வசித்து வந்த சீனர் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவர் என இருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.