ஜம்முவின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

9 April 2021, 5:09 pm
umar abdullah - updatenews360
Quick Share

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான தகவலைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள உமர் அப்துல்லா அதில், ஒரு வருடமாக நான் இந்த மோசமான வைரசைத் தடுக்க என்னால் முடிந்ததைச் செய்தேன். ஆனால் கடைசியாக வைரஸ் என்னைத் தாக்கி விட்டது.

எனக்கு இன்று பிற்பகல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் எதுவும் இல்லை. மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி, நான் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு உள்ளிட்டவற்றைக் கண்காணித்து வருகிறேன்’ எனப்பதிவிட்டுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் உமர் அப்துல்லாவின் தந்தையுமான பரூக் அப்துல்லா அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். கடந்த புதன் கிழமைதான் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து பரூக் அப்துல்லா குணம் அடைந்த நிலையில், உமர் அப்துல்லா தற்போது தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.

Views: - 41

0

0