‘I AM BACK’: சொந்தமாக சமூக வலைதளத்தை தொடங்கினார் ட்ரம்ப்..!!

Author: Aarthi Sivakumar
21 October 2021, 8:47 am
Quick Share

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் சொந்தமாக ட்ரூத் சோஷியல் என்ற சமூக வலைதளத்தை தொடங்கியுள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் சொந்தமாக சமூக வலைதளத்தை தொடங்கினார். தனது டிரம்ப் மீடியா& டெக்னாலஜி குரூப் நிறுவனம் சார்பில் ‘ட்ரூத் சோஷியல்’ என்ற வலைதளத்தை டிரம்ப் இன்று தொடங்கியுள்ளார்.

TRUTH Social: Donald Trump to launch social network, saying 'your favourite  president has been silenced' | World News | Sky News

இந்த சமூக வலைதளத்திற்கு ‘ட்ரூத் சோஷியல்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆப் அமெரிக்கா முழுவதும் முதல்காலாண்டில் வெளியாக வாய்ப்பு என டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் ஆப்பில் ஸ்டோரில் ‘ட்ரூத் சோஷியல்’ ஆப் வெளியிடப்பட்ட நிலையில் பீட்டா பதிப்பு நவம்பரில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வந்ததால் டிரம்பின் கணக்குகளை டுவிட்டர், முகநூல் நிறுவனங்கள் முடக்கிய நிலையில் சொந்தமாக சமூக வலைதளத்தை அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் இன்று தொடங்கியுள்ளார்.

Views: - 841

0

0