சம்பள பாக்கியா கேக்குற.. இந்தா வாங்கிக்க.. முதலாளியின் செயலால் தொழிலாளி அதிர்ச்சி!

1 April 2021, 8:00 am
Quick Share

வேலையை விட்டு நின்றுவிட்ட தொழிலாளி ஒருவர், தனது முதலாளியிடம் சம்பள பாக்கியை கேட்க, அவர் கிரீஸ் தடவிய நாணயங்களை குவியலாக அனுப்பி வைத்திருக்கிறார். இதனை கண்ட தொழிலாளி அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்.

ஜார்ஜியா நாட்டை சேர்ந்தவர் ஆண்ட்ரியாஸ் பிளாட்டன். இவர் கடந்த நவம்பர் மாதம் தான் வேலை பார்த்து வந்த கம்பெனியான ஏ ஓகே வாக்கர் ஆட்டோவொர்க்ஸில் இருந்து வேலையை விட்டு நின்றிருக்கிறார். மேலும், தனது சம்பள பாக்கியை தர வேண்டும் எனவும் முதலாளிக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். முதலாளியும் அவருக்கு சேர வேண்டிய தொகையான 915 டாலரை பிளாட்டனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

ஆனால் வந்ததோ குவியல் குவியலாக நாணயங்கள். அதுவும் நாணயங்கள் முழுவதும் கிரீஸ் தடவப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. வேலையை விட்டு நின்ற பிளாட்டன் மீது கோபம் கொண்ட முதலாளி தான் இவ்வாறு செய்திருக்கிறார். மேலும் அதனுடன் ஒரு கடிதத்தையும் வைத்து அனுப்பி இருக்கிறார். இதனால் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார் பிளாட்டன். அப்படி என்ன கோவமோ தெரியலை!

இதுகுறித்து பிளாட்டன் கூறுகையில், ‘முதலாளி குழந்தைத்தனமாக நடந்து கொண்டிருக்கிறார். எனது கடைசி மாத சம்பளத்தை பெறவே நான் போராடி, பின் ஜார்ஜியா தொழிலாளர் துறைக்கு சென்று உதவியை நாடினேன். என் காதலியுடன் வெளியே கிளம்பிய போது என் வீட்டின் முன் நாணய குவியல், கிரீஸ் தடவப்பட்டு இருந்தது. அதிலிருக்கும் கிரீஸை நீக்கினால் தான் இது பணமாக கருதப்படும். மொத்தம் 90 ஆயிரம் நாணயங்கள் இருக்கின்றன. 100 நாணங்களை சுத்தம் செய்யவே எனக்கு பல மணி நேரம் ஆனது. இது நியாயம் இல்லாத செயல்’ என வருத்தப்பட்டிருக்கிறார்.

இதனை அவரது காதலி வீடியோவாக எடுத்து, காதலனின் கதையை வெளி உலகத்துக்கு சொல்லி, முதலாளிகள் மிகவும் மோசமாக நடந்து கொள்கின்றனர் என கூறியிருக்கிறார். அது தற்போது பேசுபொருள் ஆகி இருக்கிறது.

Views: - 0

0

0

Leave a Reply