அமெரிக்காவில் பள்ளிக்கூடத்தில் நடந்த திடீர் துப்பாக்கிச்சூடு: 3 மாணவர்கள் உள்பட 4 பேர் படுகாயம்..!!

Author: Aarthi Sivakumar
7 October 2021, 8:46 am
Quick Share

வாஷிங்டன்: டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் நடந்த திடீர் துப்பாக்கி சூட்டில் 4 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஆர்லிங்டனில் உள்ள டிம்பர்வியூ உயர்நிலை பள்ளியில் மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கி சூடு நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் -  Oneindia Tamil

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை மீட்பதற்காக பெற்றோர்கள் பள்ளி வளாகம் அருகே குவிந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்து உள்ளனர்.
அவர்களில் 3 பேர் மாணவர்களும், வயது முதிர்ந்த ஒருவர் ஆசிரியராக இருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் கர்ப்பிணி ஆசிரியர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டு உள்ளது. எனினும், சம்பவ பகுதியிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் 18 வயதுடைய நபர் என கண்டறியப்பட்டு உள்ளது.

திமோதி ஜார்ஜ் சிம்ப்கின்ஸ் என்ற அந்த நபர் தாக்குதல் நடத்தி விட்டு வாகனத்தில் தப்பி சென்றுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அவரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.

Views: - 502

0

0