ஜெர்மனியில் வெள்ளப்பெருக்கு: 6 பேர் பலி

15 July 2021, 11:23 pm

epa09345889 Debris of houses and cars after flooding in Schuld, Germany, 15 July 2021. Large parts of Western Germany were hit by heavy, continuous rain in the night to 15 July, resulting in local flash floods that destroyed buildings and swept away cars. EPA-EFE/SASCHA STEINBACH

Quick Share

ஜெர்மனியில் தொடர் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜெர்மனியின் மேற்கு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வெள்ளநீர் குடியிருப்பு பகுதியை சூழ்ந்துகொண்டது. நேற்றிரவு பெய்த மழை காரணத்தால் ரைன்லேண்ட்-பேலட்டினேட் என்ற நகரில் உள்ள ஸ்கல்டு பகுதியில் இருக்கும் 6 குடியிருப்பு வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. மேலும், 25 வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த வெள்ளப்பாதிப்பால் அப்பகுதியில் 30 பேர் காணாமல் போய் உள்ளனர். மேலும், இந்த வெள்ளப்பெருக்கில் இதுவரை 2 தீயணைப்பு வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த இடத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் காவல்துறையினருடன் தற்போது ஜெர்மனியின் ராணுவ வீரர்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 164

1

0