கிளிமஞ்சாரோவில் ஏறி சாதனை படைத்த 9 வயது இந்திய சிறுமி!

3 March 2021, 8:02 am
Quick Share

ஆப்ரிக்க நாட்டின் மிக உயரமான கிளிமஞ்சாரோ மலையில் ஏறிய, 9 வயது மட்டுமே நிரம்பிய இந்திய சிறுமி, புதிய சாதனை படைத்துள்ளார். அவருக்கு நெட்டிசன்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ ஆப்ரிக்க கண்டத்தின் மிக உயரமான மலைச் சிகரம் ஆகும். இந்த சிகரத்தின் மீது 9 வயது மட்டுமே நிரம்பிய இந்திய சிறுமியான ரித்விகா ஸ்ரீ ஏறியதன் மூலம், கிளிமஞ்சாரோவில் ஏறிய இளம் வயதுடையவர்களில், இவர் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மேலும், கிளிமஞ்சாரோ மலையில் உள்ள கில்மன் முனை சிகரம் மீது ஏறிய ஆசிய நாட்டைச் சேர்ந்த இளம்நபர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார். இது கடல் மட்டத்திலிருந்து 5,681 மீட்டர்கள் உயரத்தில் உள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியான ரித்விகா ஸ்ரீ தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரர். கடல் மட்டத்தில் இருந்து, 5,681 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ மலையின் கில்மன் சிகரத்தை, அவர் அடைந்துள்ளார். ரித்விகாவின் மலை ஏற்ற பயணத்தின் போது, அவரது தந்தையும் அவருடன் வழிகாட்டியாக சென்றிருக்கிறார்.

இதன் மூலம், கிளிமஞ்சாரோ மலைச் சிகரத்தில், மிக இளம் வயதில் ஏறிய, உலகின் இரண்டாவது நபர் என்ற சாதனையையும், ஆசியாவின் முதல் நபர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில், தனது சாதனையை நிகழ்த்திய ரித்விகாவுக்கு நெட்டிசன்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 10

0

0