டுவின்ஸை திருமணம் செய்த டுவின்ஸ்.. இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பமான அதிசயம்!

3 April 2021, 9:15 am
Quick Share

அமெரிக்காவை சேர்ந்த இரட்டை சகோதரிகள், ஒரே மாதிரியான இரட்டை சகோதரர்களை திருமணம் செய்து கொள்ள, அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரித்துள்ள அதிசயம் நிகழ்ந்திருக்கிறது.

அமெரிக்காவில் வர்ஜீனியாவில் வசிக்கும் ஒரே மாதிரியான இரட்டை சகோதரிகள் பிரிட்டானி மற்றும் பிரியானா டீன். இவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு இரட்டையர்களுக்கான விழாவில், ஜோஷ் மற்றும் ஜெர்மி சாலியர்ஸை சந்தித்திருக்கின்றனர். ஆறு மாதங்களுக்கு பிறகு சகோதரர்கள் (35 வயது) இருவரும், சகோதரிகளுக்கு (வயது 33) தங்கள் காதலை புரபோஸ் செய்தனர்.

இதனையடுத்து அவர்கள் இரு ஜோடிக்கும், 2018 ஆம் ஆண்டு ஒரே மேடையில் திருமணம் நடந்தது. அதிசயிக்கத்தக்க வகையில், இரு சகோதரிகளும் ஒரே சமயத்தில் கர்ப்பம் தரித்துள்ளனர். அதில் ஒரு ஜோடிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறக்க, மற்றொரு ஜோடி தங்கள் குழந்தையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இவர்கள் தங்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் குழந்தையின் புகைப்படத்துக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

மேலும் காதலை வெளிப்படுத்தும் தருணம், கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் என அவர்கள் பகிர்ந்த புகைப்படம் அனைத்திலும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சகோதரிகள் இருவரும் தங்கள் கர்ப்பம் தரித்ததை, இன்ஸ்டாகிராமில் ஒன்றாக அறிவித்திருந்தனர். ஒரே வீட்டில் வசிப்பதற்கும், தங்கள் குழந்தைகளை ஒன்றாக வளர்ப்பதற்கும் அனைவரும் உற்சாகமாக இருப்பதாக இந்த ‘டுவின்ஸ்’ மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். எத்தனை பேருக்கு வாய்க்கும் இந்த இன்பம்!!

Views: - 0

0

0

Leave a Reply