இறந்தவர்களின் ஆடைகள் ஆன்லைனில் விற்பனை…திகில் ஜாம்பி மேக்-அப்பில் கவனம் ஈர்க்கும் பெண்…!!

29 October 2020, 5:50 pm
zombie - updatenews360
Quick Share

தாய்லாந்தை சேர்ந்த ஆன்லைன் விற்பனையாளரான கனித்தா தாங்னாக், இறந்தவர்களின் உடையை விற்பனை செய்து வருகிறார். வித்தியாசமான முறையில் விற்பனை செய்ய விரும்பிய கனித்தா, திகில் ஊட்டும் ஜாம்பி மேக்அப் மற்றும் உடை அணிந்துகொண்டு, விர்ச்சுவல் ஆடை விற்கும் தொழிலில் இறங்கியுள்ளார்.

அவருடைய ஜாம்பி மேக்அப் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்காக தினமும் 3 மணி நேரம் செலவிடுவதாக கனித்தா தெரிவித்துள்ளார். இரவு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒவ்வொரு உடையை காண்பிக்கும்போதும் அந்த உடைக்கு சொந்தக்காரர் எப்படி இறந்தார் என்பது பற்றிய பின்னணியையும் விளக்குகிறார்.

இதில் பிராண்டட் பொருட்கள் முதல் குறைந்த விலையிலான பொருட்கள் வரை அனைத்தையும் விற்பனை செய்கிறார். ஒருவர் இறந்த பிறகு அவரின் ஆடைகளை எரித்ததை பார்த்ததில் இருந்து தனக்கு இந்த ஐடியா கிடைத்ததாகவும் கனித்தா கூறுகிறார்.

இறந்தவர்களுக்கான பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்பட்டபின், அடக்கம் செய்பவர்களிடம் இருந்து ஆடைகளை பெற்றுக்கொள்ளும் கனித்தா, தனது வருமானத்தின் ஒரு பகுதியை புத்த கோவில்களுக்கு நன்கொடையாக கொடுக்கிறார்.

Views: - 27

0

0