ஆப்கன் பயங்கரவாதிகளின் கூடாரமாகி விடக்கூடாது : இந்தியா – அமெரிக்கா கூட்டாக எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
25 September 2021, 6:00 pm
modi - joe biden - updatenews360
Quick Share

பயங்கரவாதிகளின் கூடாரமாக ஆப்கானிஸ்தானை மாற்றி விடக் கூடாது என்று தலிபான்களுக்கு இந்தியா – அமெரிக்கா நாடுகள் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளன.

3 நாள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு ஐ.நா. பொதுச்சபை கூட்டம் உள்ளிட்ட முக்கிய கூட்டங்களில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

இந்தியா – அமெரிக்கா நாடுகளில் தலைவர்களின் சந்திப்பிற்கு பிறகு, ஆப்கானிஸ்தானில் தற்காலிக ஆட்சியை நடத்தி வரும் தலிபான்களுக்கு இரு நாடுகளும் இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கூறியிருப்பதாவது : ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை ஒடுக்கியே ஆக வேண்டும். ஆப்கானிஸ்தானில் பெண்கள், சிறார்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தலிபான்கள் மதித்தே ஆக வேண்டும். அதேபோல, ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் உள்நாட்டவர் மற்றும் வெளிநாட்டவர்களை தடுக்கக் கூடாது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 430

0

0