இந்தியர்கள் நாளை முதல் WELCOME : ஜெர்மனி செல்வதற்கான தடை நீக்கம்!!

6 July 2021, 11:13 am
Indo germany - Updatenews360
Quick Share

ஜெர்மனிக்குள் இந்தியர்கள் வருவதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை நாளை முதல் நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பரவி வரும் கொரோனாவின் தாக்கம் தற்பொழுதும் குறைந்த பாடில்லை. இந்நிலையில், கடந்த மார்ச் முதல் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை ஏற்பட்டு பெரும் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதுடன், கொரோனா உருமாறி மேலும் அதிகளவில் பரவ தொடங்கியது.

எனவே, இந்தியாவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வகை கொரோனா காரணமாக பல நாடுகள் இந்திய பயணிகளுக்கு தடை விதித்திருந்தது. அதில் ஒன்றாக ஜெர்மனி அரசாங்கமும் இந்திய பயணிகள் உட்பட ரஷ்யா, நேபாளம், போர்ச்சுக்கல் மற்றும் இங்கிலாந்து பயணிகளுக்கும் தங்கள் நாட்டிற்குள் வருவதற்கு தடை விதித்திருந்த நிலையில், நாளை முதல் இந்த தடை நீக்கப்படுவதாக ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது.

Views: - 225

0

0