பாகிஸ்தானுக்குள் புகுந்து அடுத்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதல்..! இந்த முறை மாஸ் காட்டியது ஈரான்..!

4 February 2021, 9:17 pm
Iran_Surjical_Strike_UpdateNews360
Quick Share

ஈரானின் பாதுகாப்புப் படையான புரட்சிகர காவலர்கள் (ஐ.ஆர்.ஜி.சி) படை தனது இரண்டு வீரர்களை பாகிஸ்தானின் எல்லைக்குள் புகுந்து ஒரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதல் மூலம் வெற்றிகரமாக விடுவித்தனர். 

சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு படையினரை ஜெய்ஷ் உல்-அட்ல் எனும் அமைப்பு பிணைக் கைதிகளாக அழைத்துச் சென்றது.

“இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஜெய்ஷ் உல்-அட்ல் அமைப்பால் பணயக்கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு எல்லைக் காவலர்களை மீட்பதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஒரு வெற்றிகரமான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என்று ஐ.ஆர்.ஜி.சி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியது.

படையினர் மீண்டும் ஈரானுக்கு மாற்றப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான எல்லையில் 12 ஐ.ஆர்.ஜி.சி காவலர்கள் ஜெய்ஷ் உல்-அட்லால் கடத்தப்பட்டனர். சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மெர்கவா நகருக்குள் காவலர்கள் கடத்தப்பட்டனர்.

12 வீரர்களில் ஐந்து பேர் 2018 நவம்பரில் விடுவிக்கப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவம் நான்கு பேரை 2019 மார்ச் 21 அன்று மீட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மீதமுள்ள நபர்கள் தற்போது ஈரான் நடத்திய சர்ஜிக்கல் தாக்குதல் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

ஜெய்ஷ் உல்-அட்ல் ஈரானால் ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஈரானிய அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0