இந்தி மொழிக்காக தனி ட்விட்டர் அக்கௌன்ட்..! பிற மொழிகளிலும் கணக்கைத் தொடங்கிய ஈரான் தலைவர் கமேனி..! என்ன காரணம்..?
9 August 2020, 10:46 pmஈரான் அதிபர் அயதுல்லா சையத் அலி கமேனி இந்தியில் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கைத் திறந்துள்ளார். தேவநகரி எழுத்து முறையில் அவரது பயோ எழுதப்பட்ட புதிய கணக்கு, அதே ஸ்கிரிப்டில் ட்வீட்களை வெளியிட்டு வருகிறது.
இந்த பதிவு வெளியிடப்படும் நேரத்தில் அவருடைய புதிய கணக்கில் 1,200’க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருந்தனர். கமேனி இதுவரை இரண்டு ட்வீட்களை வெளியிட்டுள்ளார்.
இந்தி மட்டுமல்லாது பாரசீகம், அரபு, உருது, பிரஞ்சு, ஸ்பானிஷ், ரஷ்ய மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் கமேனி ட்விட்டர் கணக்குகளை உருவாக்கியுள்ளார். இருப்பினும், இதுவரை கமேனி தனது புதிய இந்தி கணக்கிலிருந்து எந்த இந்தியத் தலைவரையும் பின்பற்றவில்லை.
கமேனி ஒரு ட்வெல்வர் ஷியா மர்ஜா மற்றும் ஈரானின் இரண்டாவது மற்றும் தற்போதைய தலைவர் ஆவார்.
அவர் முன்னர் 1981 முதல் 1989 வரை ஈரானின் ஜனாதிபதியாக இருந்தார். மேலும் 1989 முதல் பதவியில் இருக்கும் கமேனி, மத்திய கிழக்கு நாடுகளிலேயே மிக நீண்ட காலம் தலைவராக உள்ள நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் எதற்காக பல்வேறு மொழிகளிலுக்கும் தனித்தனியாக ட்விட்டர் கணக்கைத் தொடங்கியுள்ளார் என்பது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.