வெற்றியின் விளிம்பில் ஜோ பைடன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் நீடிக்கும் இழுபறி..!!

7 November 2020, 8:15 am
joebiden-updatenews360
Quick Share

வாஷிங்டன்: பென்சில்வேனியா உள்ளிட்ட முக்கிய மாகாணங்களிலும் ஜோ பைடன் முன்னிலை வகிப்பதால் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. கொரோனா அச்சத்தாலும், முன்கூட்டியே வாக்கு அளிப்பதை பல மாகாணங்களும் எளிமைப்படுத்தியதாலும், இந்த முறை முன்கூட்டி வாக்கு அளித்தவர்களும், தபால் மூலம் வாக்களித்தவர்களும் அதிகம், கடந்த 2016 தேர்தலில் இந்த எண்ணிக்கை 4.60 கோடியாக இருந்துள்ளது.

இத்தகைய வாக்குப்பதிவுகள் 10 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த முறையை விட இந்த முறை வாக்குகள் அதிகம் என்றாலும், எண்ணுவதற்கு அதே எண்ணிக்கையிலான அதிகாரிகளே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என சொல்லப்படுகிறது.

trumph and joe - updatenews360

இந்நிலையில், பென்சில்வேனியா, ஜார்ஜியா, அரிசோனா, வட கரோலினா, நெவாடா, அலாஸ்கா ஆகிய மாகாணங்களில் ஓட்டு எண்ணிக்கை நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது. அங்கு வாக்கு எண்ணிக்கையை நிறுத்த டிரம்ப் பிரசார குழு நீதிமன்றத்தை நாடியபோது, அது நிராகரிக்கப்பட்டது. இதேபோல் மிச்சிகனிலும் டிரம்ப் தரப்பு வழக்கை அந்த மாகாண நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

ஜோ பைடன் வெற்றியை நோக்கி தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கிறார். டிரம்பை விட ஜோ பைடனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அரிசோனாவை ஜோ பைடன் கைப்பற்றிவிட்டால், அவர் நெவேடாவிலும், ஜார்ஜியா அல்லது பென்சில்வேனியாவில் வெற்றி பெற்று விட்டால் போதுமானது. அவர் அமெரிக்க அதிபராக விட முடியும். ஜார்ஜியாவிலும், நெவேடாவிலும், அரிசோனாவிலும் கூடுதலாக வாக்குகள் பெற்று ஜோ பைடன் முன்னணியில் உள்ளார்.

Views: - 32

0

0