மலேசியாவின் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப் தேர்வு: 114 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

Author: kavin kumar
20 August 2021, 10:02 pm
Quick Share

மலேசியாவின் புதிய பிரதமராக யூஎம்என்ஓ கட்சியை சேர்ந்த இஸ்மாயில் சப்ரி யாகோப் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

மலேசியா நாட்டில் நடைபெற்று வந்த கூட்டணி ஆட்சியில் ஏற்பட்ட விரிசலால் முஹ்யித்தீன் யாசின் தலைமையிலான புதிய கூட்டணி அரசு அமைந்தது. அதன்பிறகு இந்த அரசு கரோனாவை சரியாகக் கையாளவில்லை எனக் கடும் விமர்சனங்கள் எழுந்தன.இதற்கிடையே கூட்டணிக் கட்சியான யூஎம்என்ஓ, ஊழல் புகார்கள் சம்மந்தமான விவகாரத்தால் அரசுக்கான தனது ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் பிரதமர் முஹ்யித்தீன் யாசின் தலைமையிலான அரசு பெருமான்மையை இழந்தது.

இதனையடுத்து முஹ்யித்தீன் யாசினும் அவரது தலைமையிலான அமைச்சரவையும் தங்களது பதவியை இராஜினாமா செய்தனர். இதனையடுத்து பிற அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்குமா அல்லது தேர்தல் நடைபெறுமா எனச் சந்தேகம் ஏற்பட்டது. இந்தநிலையில் யூஎம்என்ஓ கட்சியை சேர்ந்த இஸ்மாயில் சப்ரி யாகோப் புதிய பிரதமராக மன்னர் நியமித்துள்ளார். இஸ்மாயில் சப்ரிக்கு 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 114 பேர் ஆதரவு தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மலேசியாவில் ஒரு வருடத்திற்குள் மூன்று பேர் பிரதமாக பதவி ஏற்றுள்ளனர்.

Views: - 393

0

0