மாலியில் வெடித்தது ராணுவ புரட்சி..! அதிபரும், பிரதமரும் துப்பாக்கி முனையில் கைது..!

19 August 2020, 8:09 am
mali arrest - updatenews360
Quick Share

மாலியில் ஏற்பட்டுள்ள ராணுவ புரட்சியால், அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேற்கு ஆப்ரிக்கா நாடான மாலியில் பயங்கரவாதத்தை தடுக்க தவறியதாகவும், தேர்தலில் முறைகேடு நடத்தியதாகவும் ராணுவ புரட்சி கிளம்பியுள்ளது. கடந்த மாதங்களாக மாலி அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவிற்கு எதிராக பெரும் போராட்டம் நடந்து வந்தது.

இந்த நிலையில், அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோரை துப்பாக்கி முனையில் வைத்து ராணுவத்தினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் அறிவித்துள்ளார்.

மாலியில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தற்போது உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அதிபர், பிரதமரை எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனேியோ குட்டரஸ் தெரிவித்தார்.

Views: - 43

0

0