மீண்டும் இந்து நாடாக மாறுகிறதா நேபாளம்..! அரசியலமைப்பு தினத்தன்று முழங்கிய முன்னாள் துணை பிரதமர்..!

22 September 2020, 9:34 am
Kamal_Thapa_Nepal_Updatenews360
Quick Share

செப்டம்பர் 19’ஆம் தேதி நேபாளத்தின் அரசியலமைப்பு தினத்தன்று நேபாளத்தின் முன்னாள் துணைப் பிரதமர் கமல் தாபா, மதச்சார்பற்ற அடையாளத்தைக் கைவிட்டு நாட்டின் இந்து அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கமல் தாப்பா தலைமையிலான ராஸ்திரிய பிரஜாதந்திரக் கட்சி நேபாளத்தின் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் முன் மீண்டும் மீண்டும் முன்வைத்து வந்த இந்து நாடாக நேபாளத்தின் முந்தைய நிலையை மீட்டெடுப்பதற்கான நீண்டகால கோரிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

தேசத்தின் பெரிய நலன்களைக் கருத்தில் கொண்டு நேபாளத்தை இந்து குடியரசாக அறிவிக்க வேண்டும் என்று கமல் தாபா ட்வீட் செய்துள்ளார். அவரது கட்சி தொண்டர்களும் கையெழுத்து பிரச்சாரத்தை நடத்துவதன் மூலம் இந்த கோரிக்கையை எழுப்புகின்றனர். நேபாளத்தின் உலக இந்து கவுன்சிலின் செயலாளர் ஜிதேந்திர குமார், நேபாள மக்கள்தொகையில் சுமார் 82 சதவீதம் இந்துக்கள் என்று கூறியுள்ளார். 

இந்து தேசத்தின் நிலையை பறிப்பதன் மூலம் நேபாளத்தின் அசல் தன்மை சிதைந்துள்ளது. எனவே இந்து தேசத்தின் நிலை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பது நாட்டின் மக்களின் கூட்டு கோரிக்கையாகும் என்று அவர் கூறினார்.

நேபாளத்தின் முன்னாள் துணை பிரதமர் பிரதமர் மேலும், இதற்கு நரேந்திர மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் ஆதரவைப் பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், உத்தரப்பிரதேச இந்துத்துவாவதி முதல்வருமான யோகி ஆதித்யநாத் இந்த விஷயத்தில் ஒத்துழைத்து, மதச்சார்பின்மையை ரத்துசெய்து நேபாளத்தின் இந்து அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்துவதன் மூலம் முழுமையான மத சுதந்திரத்தை அடைய அவர்களுக்கு உதவுவார்கள் என்று நேபாள மக்கள் நம்புகிறார்கள் என்று கமல் தாபா கூறினார்.

கடந்த ஆண்டும், தொடர்ச்சியாக ராஸ்திரிய பிரஜாந்திர கட்சி, பிரதமர் கே பி ஒலிக்கு வழங்கிய குறிப்பில், நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரியது. முடியாட்சி ஒழிக்கப்பட்டதை அடுத்து 2006 கம்யூனிச இயக்கத்தின் வெற்றியின் பின்னர் 2008’இல் நேபாளம் ஒரு மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 1

0

0