வேதியியலுக்கான நோபல் பரிசு : இரு விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பதாக தேர்வுக்குழு அறிவிப்பு

Author: Babu Lakshmanan
6 October 2021, 3:57 pm
nobel prize - updatenews360
Quick Share

2021ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் 4ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, நேற்று முன்தினம் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேதியியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித்துள்ளது. வேதியியல் மூலக்கூறு கட்டமைப்பு தொடர்பான கண்டுபிடிப்புகளுக்கான ஜெர்மனியைச் சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் அமெரிக்காவின் டேவிட் டபுள்யூ.சி. மேக்மில்லன் ஆகியோருக்கு பகிர்ந்தளிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 864

0

0