ஆயில் டேங்கர் வெடித்து விபத்து: 92 பேர் பலி

Author: kavin kumar
6 November 2021, 10:52 pm
Quick Share

சியாரா லியோனில் ஆயில் டேங்கர் வெடித்த சம்பவத்தில் 92 பேர் உயிரிழந்தனர்.

ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள சியாரா லியோன் தலைநகரான ப்ரீடவுனில் ஆயில் டேங்கர் ஒன்று மற்றொரு வாகனம் மீது மோதியதை தொடர்ந்து வெடித்தது. இதில் 92 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கையை அரசு உறுதி செய்யவில்லை. அதேநேரத்தில் 91 உடல்கள் வந்துள்ளதாக பிணவறை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.ஆயில் டேங்கர் மோதியதை தொடர்ந்து, அதில் இருந்து கசிந்த எரிபொருளை சேகரிக்க மக்கள் கூடினர். அப்போது டேங்கர் வெடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆயில் டேங்கர் வெடித்ததால், அருகில் இருந்த கடைகள் மற்றும் கட்டடங்களில் தீ பரவி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. காயமடைந்தவர்கள், அந்நகரத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.பெட்ரோல் பங்க் அருகே நடந்த இந்த விபத்தினால் தீப்பிடித்து அங்குள்ள பெட்ரோல் சேமிப்பு கிடங்கு வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என அந்நாட்டு அதிபர் ஜூலியஸ் மாடா பயோ ட்வீட் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக தமது அரசு அனைத்தையும் செய்யும் என கூறியுள்ளார்.

Views: - 1199

0

0