இங்கிலாந்தில் மருத்துவமனை அருகே துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு..!!

14 April 2021, 9:11 am
england corona - updatenews360
Quick Share

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் மருத்துவமனை அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்கம் நகரில் உள்ள மருத்துவமனைக்கு அருகே நேற்று 2 ஆண் நபர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்மநபர் மருத்துவமனை அருகே நின்றுகொண்டிருந்த 2 பேர் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்களை பரிசோதித்த மருத்துவர்கள் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த ஒரு நபர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
மற்றொருவர் படுகாயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பர்மிங்கம் நகர மருத்துவமனை பகுதியை சுற்றிவளைத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Views: - 22

0

0