ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு மாகாண அந்தஸ்து வழங்க முடிவு..! பாகிஸ்தான் அடாவடி..!

17 September 2020, 8:00 pm
gilgit_baltistan_updatenews360
Quick Share

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியான கில்கிட்-பால்டிஸ்தானின் நிலையை முழு அளவிலான மாகாணமாக உயர்த்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது என்று பாகிஸ்தான் ஊடக அறிக்கை ஒன்று மூத்த அமைச்சரை மேற்கோளிட்டு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே கில்கிட் மற்றும் பால்டிஸ்தான் பகுதிகள் உட்பட ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய முழு யூனியன் பிரதேசங்களும் நாட்டின் ஒரு முழுமையான பகுதியாக இருப்பதை இந்தியா பாகிஸ்தானுக்கு தெளிவாக உணர்த்தியுள்ளது.

எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனில் வெளியான ஒரு அறிக்கையின்படி, காஷ்மீர் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் விவகாரங்களுக்கான அமைச்சர் அலி அமீன் காந்தபூர் நேற்று பிரதமர் இம்ரான் கான் இப்பகுதிக்கு வருகை தந்து கில்கிட்-பால்டிஸ்தானை அனைத்து அரசியலமைப்பு உரிமைகளையும் கொண்ட முழு மாகாணமாக உயர்த்துவதற்கான முறையான அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறினார்.

தேசிய பாராளுமன்றம் மற்றும் செனட் உட்பட அனைத்து அரசியலமைப்பு அமைப்புகளிலும் கில்கிட்-பால்டிஸ்தானுக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று காந்தபூர் மேலும் கூறினார்.

“அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்த பின்னர், கில்கிட்-பால்டிஸ்தானுக்கு அரசியலமைப்பு உரிமைகளை வழங்க மத்திய அரசு கொள்கை அடிப்படையில் முடிவு செய்துள்ளது” என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக பாகிஸ்தான் அரசாங்கமோ அல்லது அதன் நீதித்துறையோ சட்டவிரோதமாகவும், வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ள இந்தியாவின் பகுதிகளில் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளக் கூடாது என்று இந்தியா கடந்த மே மாதம் கூறிய நிலையில், பாகிஸ்தான் தற்போது மீண்டும் இந்தியாவை சீண்டும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.