2020ம் ஆண்டு உலகிலேயே அதிகம் தேடப்பட்ட உணவு பிட்சா தானாம்….

16 January 2021, 9:19 am
Quick Share

பிரிட்டிஷ் நாட்டின் காப்பீடு நிறுவனமான மணிபீச் என்ற நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் 2020ம் ஆண்டில் உலகிலேயே அதிக மக்களால் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பிட்சா என தெரியவந்துள்ளது. இந்தியா அர்ஜெண்டினா, எகிப்து, பிரான்ஸ், ஃபின்லாந்து, மொராக்கோ, ஸ்பெயின், ஜெர்மனி, தென்கொரியா, உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகமாக பிட்சாவை வாங்கியுள்ளனர். இத்தாலி உணவான பிட்சா தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நேபால், இலங்கை, சிலி, போலிவியா, நைஜீரியா, கானா உள்ளிட்ட நாடுகளில் பிட்சா விரும்பிகள் அதிகம் உள்ளனர்.

கூகுளில் 2020ம் ஆண்டு தேடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த முடிவுகளை மணிசர்ச் நிறுவனம் ஆய்வு செய்து உலகில் அதிகமாக மக்களால் தேடப்பட்ட உணவுகளைத் தேர்வு செய்ததாக குறிப்பிட்டுள்ளது. இதில் 44 உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் அதிக தேடலைப் பெற்று பிட்சா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இத்தாலி உணவாக பிட்சா கருதப்பட்டாலும் ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டு மக்களின் சுவைக்கு ஏற்ப பிட்சாவின் ருசியை நாட்டிற்கு நாடு மாற்றியுள்ளனர். உலகம் முழுவதும் உள்ள பன்னாட்டு பிட்சா உணவகம் கூட நாட்டிற்கு நாடு வேறு வேறு சுவை கொண்ட பிட்சாக்களையே தயாரிக்கின்றனர்.

இந்த பட்டியலில் இரண்டாவது அதிகம் தேடப்பட்ட உணவாகச் சீன உணவு இடம் பிடித்துள்ளது. உலகம் முழுவதும் 29 நாடுகளில் அதிகமாகச் சீன உணவுகள் சாப்பிடப்படுகின்றன. பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது ஜப்பானின் சுசி என்ற உணவு, இந்த உணவு பிரேசில், ஜப்பான், மோசம்பிக்யூ, சுவீடன், வியட்நாம், உக்ரைன், ரோமானியா உள்ளிட்ட நாடுகளில் சாப்பிடப்படுகிறது. இந்த பட்டியலில் பிரிட்டிஷ் ஸ்டேபிள் பிஷ், பிரைடு சிக்கன், இந்திய உணவுகள், கொரிய உணவுகள், தாய்லாந்து உணவுகள், தாபாஸ் உணவுகள், மெக்ஸிக்கன் உணவுகள் இடம் பிடித்துள்ளன.

Views: - 0

0

0