இப்படியும் ஒரு போட்டியா?…13 பேய் படங்களை தனியாக பார்த்தால் ரூ.1 லட்சம் பரிசு: வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்க நிறுவனம்!!

Author: Aarthi
14 September 2021, 11:14 am
Quick Share

நியூயார்க்: அமெரிக்காவில் பிரபலமான 13 திகில் படங்களை பார்ப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை கொடுக்கப்படும் என்று பிரபல நிறுவனம் ஒன்று வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் பினான்ஸ்பஸ் என்ற நிறுவனம் திகில் படங்கள் பார்க்கும் போட்டி ஒன்றை நடத்துகிறது. அந்த போட்டியின்படி, ஒரு நபர் உலகின் தலைசிறந்த 13 திகில் படங்களை பார்க்க வேண்டும். இந்த படங்களை பார்க்கும் போது ஃபிட்பிட் உதவியுடன் அவர்களின் இதய ஓட்டம் கணக்கிடப்படும்.

அவர்கள் எந்த படங்களை, எந்த காட்சிகளை பார்க்கும் போது பயப்படுகிறார்கள் என்று இந்த ஃபிட்பிட் மூலம் கணக்கிடப்படும். இந்த 13 படங்களை 10 நாட்களுக்குள் அவர்கள் பார்க்க வேண்டும். படம் பார்க்கும் எல்லோருக்கும் இந்த பரிசு தொகை வழங்கப்படும். இதில் படம் பார்க்கும் நபர்களின் இதய துடிப்பை மிகவும் நெருக்கமாக கண்காணிக்க உள்ளனர். இந்த 13 படங்களை பார்க்கும் நபர்களை வைத்து அந்த நிறுவனம் முக்கியமான கணக்கெடுப்பு ஒன்றை நடத்துகிறது.

A Quiet Place (2018) - IMDb

இதனால் படம் பார்க்கும் எல்லோருக்கும் கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாய் வழங்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. பினான்ஸ்பஸ் நிறுவனம் மிகப்பெரிய பைனான்ஸ் நிறுவனம் ஆகும். ஹாலிவுட்டில் படங்களுக்கு தயாரிப்பு உதவிகளை செய்து வருகிறது. ஒரு திகில் படம் பார்த்தால் மக்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்று ஆய்வு செய்ய இந்த போட்டியை அறிவித்துள்ளனர்.

இதற்கான 13 படங்களின் லிஸ்டையும் அந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது. சா (Saw), அமிட்டிவில்லே ஹாரர் ( Amityville Horror), ஏ க்கோயட் பிளேஸ் ( A Quiet Place), ஏ க்கோயட் பிளேஸ் 2 (A Quiet Place Part 2), கேண்டிமேன் (Candyman), இன்சிடியஸ் (Insidious), தி பிளேயர் விட்ச் புரொஜெக்ட்(The Blair Witch Project.), சினிஸ்டர்(Sinister), கெட் அவுட் (Get Out), தி பர்ஜ் (The Purge), ஹாலவீன் 2018 (Halloween 2018), பேரனார்மல் ஆக்டிவிட்டி(Paranormal Activity), அனபெல் (Annabelle) ஆகிய படங்களை பார்க்க வேண்டும் என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Views: - 378

1

0