நேற்று அஸ்தமனமான சூரியன்..! இந்த நகரத்தில் உள்ள மக்கள் இனி 2021’இல் தான் சூரியனை பார்க்க முடியுமாம்..!

20 November 2020, 8:35 pm
Alaska_City_No_Sun_Light_UpdateNews360
Quick Share

அலாஸ்காவில் உள்ள ஒரு சிறிய நகரமான உட்கியாஸ்விக், அதன் வருடாந்திர இருளில் நுழைந்ததால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு சூரிய ஒளியைக் காண முடியாது. இந்த நிகழ்வு துருவ இரவு என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது ஒவ்வொரு குளிர்காலத்திலும் உட்கியாஸ்விக் நகரில் நிகழ்கிறது.

உட்கியாஸ்விக் எங்கே உள்ளது?

உட்கியாஸ்விக் ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கே அமைந்துள்ளது. இந்த சிறிய நகரம் முன்பு பாரோ என்று அழைக்கப்பட்டது. மேலும் இது அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அமைந்துள்ளது.

இரண்டு மாத இரவுக்கு காரணம் என்ன?

நவம்பர் 19’ஆம் தேதி 60 நாட்களுக்கு மேலாக சூரியன் உதயமாகி உட்கியாக்விக் நகரில் மறைந்தது. இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் அலாஸ்கா நகரத்தில் பூமியின் அச்சின் சாய்வால் ஏற்படுகிறது.

“துருவ இரவு என்பது ஒவ்வொரு குளிர்காலத்திலும் பாரோ (உட்கியாஸ்விக்) மற்றும் ஆர்க்டிக் வட்டத்திற்குள் உள்ள வேறு எந்த நகரங்களுக்கும் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வு ஆகும். இந்த சாய்வு சூரியனின் கதிர்கள் எதுவும் அடிவானத்திற்கு மேலே தெரியாதபடி செய்கிறது” என்று வானிலை ஆய்வாளர் அல்லிசன் சின்சார் கூறினார்.

இப்போது உட்கியாஸ்விக்கில் முற்றிலும் இருட்டாக இருக்குமா?

அலிசன் சின்சார் மேலும் கூறுகையில், உட்கியாஸ்விக்கில், இந்த நிகழ்வு இருந்தபோதிலும், முற்றிலும் இருட்டாக இருக்காது என்று கூறியுள்ளார். பகலில், நகரம் மாலை நேரத்தைப் போல் காட்சி தரும் என்றார்.

மீண்டும் சூரியன் எப்போது வரும்?

“சூரிய உதயத்திற்கு சற்று முன்னதாகவோ அல்லது சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும் வானம் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஒரு நாளைக்கு பல மணி நேரம் அவர்கள் இதை பார்க்கிறார்கள். ஜனவரி 22’ஆம் தேதி சூரியன் அதிகாரப்பூர்வமாக மீண்டும் உதிக்கும்” என்று அல்லிசன் சின்சார் மேலும் கூறினார்.

மற்ற பகுதிகளைப் போல் அல்லாமல் மக்கள் வசிக்கும் இந்த நகரத்தில் தொடர்ந்து இரண்டு மாதங்கள் இருளாக இருப்பது குறித்த தகவல் மிகவும் ஆச்சரியமான ஒன்றாக மற்ற பகுதியில் பார்க்கப்படுகிறது.

Views: - 27

0

0