ஸ்வீடன் நாட்டில் மர்ம நபர் கத்திக்குத்து தாக்குதல்..! பயங்கரவாதிகள் கைவரிசை என போலீஸ் சந்தேகம்..!

4 March 2021, 10:57 am
sweden_Updatenews360
Quick Share

ஸ்வீடனின் வெட்லாண்டாவில் மர்ம நபர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் எட்டு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் 5 பேர் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

13,000 மக்களைக் கொண்ட ஸ்வீடனின் வெட்லாண்டா நகரத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, கத்திக் குத்தில் ஈடுபட்ட நபரைக் கண்டறிந்த காவல்துறை, அவரை சிறைபிடிக்க காலில் சுடப்பட்டார். இதையடுத்து அவரும் போலீஸ் காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனினும் தாக்குதல் நடத்தியவர் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் உயர் அதிகாரி, இருபது வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர் கூர்மையான ஆயுதத்தை பயன்படுத்தி மக்களை குத்தியதாகவும் தெரிவித்தார்.

தாக்கப்பட்டவர்களில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இருவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்று அவர்கள் சிகிச்சை பெற்று வரும் ஜொன்கோப்பிங்கில் உள்ள மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீதமுள்ள மூன்று பேருக்கு மிகச்சிறிய அளவிலான காயம் ஏற்பட்டது.

போலீசார் ஆரம்பத்தில் இந்த சம்பவத்தை கொலை முயற்சி என்று கருதினர். ஆனால் பின்னர் இதில் பயங்கரவாதத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். “பயங்கரவாத நோக்கம் இருக்கிறதா என்று விசாரிக்க எங்களை வழிநடத்திய விசாரணையில் விவரங்கள் உள்ளன.” போலீஸ் அதிகாரி கிரான் விவரங்களை வழங்காமல் கூறினார்.

காவல்துறை ஸ்வீடன் உளவுத்துறை சேவையான சப்போவுடன், இந்த விவகாரத்தில் நெருக்கமாக பணியாற்றி வருவதாக கிரான் கூறினார். எனினும், சப்போவில் பத்திரிகைத் தலைவரான கார்ல் மெலின் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். வெட்லாண்டாவில் நடந்த நிகழ்வு தற்போது ஒரு போலீஸ் பிரச்சினையாக மட்டுமே உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்வீடனில் தற்போது பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதாக ஸ்வீடிஷ் உளவுத்துறை கருதுகிறது. குறிப்பாக சமீபத்திய ஆண்டுகளில் ஸ்காண்டிநேவிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடன் இரண்டு முறை தாக்குதல்களால் குறிவைக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2010’இல், ஒரு நபர் ஸ்டாக்ஹோமின் மையத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தினார். அதில் அங்கு இருந்த பொதுமக்கள் சிறிய அளவிலான காயங்களுடன் தப்பிய நிலையில், தற்கொலை குண்டை சுமந்து வெடிக்க வைத்தவர் இறந்தார்.

பின்னர், ஏப்ரல் 2017’இல், தீவிரமயமாக்கப்பட்ட உஸ்பெக் அகதிகள் ஸ்டாக்ஹோமில், திருடப்பட்ட டிரக்கை பாதசாரிகள் மீது ஏற்றியதில், ஐந்து பேர் கொல்லப்பட்டனர். டிரக்கை ஓட்டியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு பயங்கரவாத சம்பவம் நடந்துள்ளது ஸ்வீடன் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 2

0

0