குடிபோதையில் மாஸ்க் அணிய மறுத்த பயணியை, போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்ற டாக்ஸி டிரைவர்….

By: Poorni
8 January 2021, 8:58 am
Quick Share

கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி பல்வேறு உயிர்களைப் பலி வாங்கியிருந்தாலும், இன்றும் உலகில் உள்ள பல மக்களுக்கு கொரோனா குறித்த சரியான விழிப்புணர்வு இல்லை. பொதுவெளியில் வருபவர்கள் மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல சட்டங்களை அரசு வைத்திருந்தாலும் கடைப் பிடிக்க இன்னும் சிலர் மறுத்து வருகின்றனர்.

இப்படியான ஒரு சம்பவம் கடந்த புத்தாண்டு அன்று கனடாவில் நிகழ்ந்துள்ளது. கனடாவின் வேன்கோவர் ட்ரோவ் என்ற பகுதியில் ஒருவர் குடிபோதையில் டாக்ஸி ஒன்றை புக் செய்துள்ளார். அவர் டாக்ஸிக்குள் ஏறும்போது டாக்ஸியின் டிரைவர் அவரை மாஸ்க் அணியும்படி அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அந்த குடிபோதை ஆசாமி அதை மதிக்காமல் மாஸ் அணியாமல் டாக்ஸிக்குள் ஏறியது மட்டுமல்லாமல் டிரைவரின் முகத்தை எல்லாம் தொட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த டாக்ஸி டிரைவர் போலீசாருக்கு தொடர்பு கொண்டு நடந்ததைச் சொல்லியுள்ளார். அவர்கள் அருகிலிருக்கும் போலீஸ் ஸ்டேஷனிற்கு செல்ல அறிவுறுத்திய நிலையில் டாக்ஸி டிரைவர் நேரடியாகக் காரை அருகில் உள்ள விக்டோரியா போலீஸ் தலைமையகத்திற்குச் சென்று அங்கு நடந்ததைச் சொல்லியுள்ளார்.

போலீசார் வந்து அந்த போதை ஆசாமியை காரிலிருந்து இறங்கும்படி கேட்கவே, அவர் மறுத்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை வல்லுகட்டாயமாக காரிலிருந்து இறக்கி அவர் மீது , மாஸ் அணியாதது, மற்றவர்களுக்கு நோயைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டது. போலீசாரின் உத்தரவை மதிக்காமலிருந்தது, பொதுவெளியில் அதிக மதுபோதையில் சுற்றியது என பல்வேறு வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க இந்த உலகமே போராடிக்கொண்டிருக்கும் நிலையில் இது போன்ற சில நபர்களால் இந்த உலகமே அச்சத்தில் உள்ளனர். இது போன்ற போதை அசாமியை போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்ற டாக்ஸி டிரைவரை பலர் சமூகவலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Views: - 49

0

0