ரஷ்யாவில் 28 பயணிகளுடன் சென்ற விமானம் மாயம் : கடலில் விழுந்திருக்கலாம் என தகவல்?!!

6 July 2021, 3:29 pm
Russia Flight- Updatenews360
Quick Share

மாஸ்கோ : 28 பயணிகளுடன் சென்ற விமானம் மாயமாகியுள்ளதால் விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ரஷ்யா கிழக்கு பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் ரஷ்ய விமானம் மாயமானதாக தகவல் வெளியானது. இதையடுத்து விசாரணையில் ஏஎன்-26 என்ற அந்த விமானத்தில் 28 பயணிகள் இருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Dozens missing on plane in Russian Far East Kamchatka peninsula - BBC News

மேலும் விமானத்தில் 28 பயணிகளுடன் விமான குழுவை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 34 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இரண்டு குழந்தைகளை உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தரையிறங்கும் சமயத்தில் விமான தொடர்பு துண்டிக்கப்ப்டடுள்ளதாக என்ன நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பழனா நகரம் அருகே உள்ள நிலக்கரி சுரக்கத்தில் சென்றிருக்காலம் என்றும அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது. விமானம் எங்கு உள்ளதென்பதை உறுதி செய்யப்பட்டவுடன் அங்கு மீட்பு படையினர் செல்ல தயாராக உள்ளனர்.

Views: - 235

0

0