திருடிய காரில் குழந்தை – அம்மாவுக்கு அறிவுரையுடன் எச்சரிக்கை விடுத்த திருடன்

20 January 2021, 10:36 am
Quick Share

அமெரிக்காவில் சாலையில் பூட்டாமல் நிறுத்தப்பட்டிருந்த காரை திருடிய திருடன், அதில் 4 வயது குழந்தை இருந்ததை கண்ட நிலையில், அந்த குழந்தையின் அம்மாவுக்கு, காரில் குழந்தையை தனியாக விட்டுச்செல்லக் கூடாது என்று அறிவுரை கூறியதோடு மட்டுமல்லாது, இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தை சேர்ந்த பெண்மணி, தனது 4 வயது குழந்தையுடன் காரில் ஷாப்பிங் வந்தார். கடையின் முன்புறம் தனது காரை நிறுத்திய அந்த பெண்மணி, குழந்தையை காரிலேயே விட்டு எதிரில் இருந்த கடைக்கு சென்றார்.

அந்த வழியாக வந்த திருடன், அந்த காரை திருட முற்பட்டபோது, கார் பூட்டப்படாமல் இருந்ததை அறிந்து காரை திருடிக்கொண்டு 10 மைல் தொலைவு சென்று விட்டான். தனது கார் திருடுபோனதை அறிந்த அந்த பெண்மணி, உடனடியாக போலீசில் புகார் அளித்துவிட்டார். புகாரின் பேரில் , போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், காரில், குழந்தை இருப்பதை அறிந்த திருடன், காரில் இருந்த தொலைதொடர்பு கருவியின் மூலம், அந்த பெண்மணியை தொடர்பு கொண்ட திருடன்,குழந்தையை காரிலேயே விட்டுச்செல்வது குற்றம்.

இனிமேல் இந்த தவறை செய்யாதீர்கள் என்று அறிவுரை வழங்கியதோடு மட்டுமல்லாது, இதுதொடர்பாக, போலீசில் புகார் அளிக்க இருப்பதாகவும் எச்சரித்தான். பின் காரை,அதேஇடத்தில் விட்டுவிட்டு சென்றுவிட்டான்.


சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காருடன் குழந்தையையும் மீட்டு, அந்த பெண்மணியிடம் ஒப்படைத்தனர். தன் கண்பார்வையிலேயே காரை நிறுத்தியதாலேயே, குழந்தையை காரிலேயே பெண் இருக்கவைத்துவிட்டு சென்றுள்ளார். இந்த நிகழ்வில் குற்றம் ஏதும் இல்லை என்று விளக்கமளித்த போலீசார், திருடனுக்கு 20 முதல் 30 வயதுக்குள் இருக்கும் என்றும், அவன் சம்பவத்தின்போது மல்டிகலர் மாஸ்க் அணிந்திருந்ததாக போர்ட்லாண்ட் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Views: - 3

0

0