கியூவில் நின்று 16 வயது சிறுமியை நாசம் செய்த 30 ஆண்கள்..! வீடியோ வெளியானதால் இஸ்ரேலில் வெடித்தது போராட்டம்..!

23 August 2020, 2:40 pm
israel_gangrape_case_updatenews360
Quick Share

எயலட்டின் செங்கடல் ரிசார்ட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் 16 வயது டீனேஜ் சிறுமியை சுமார் 30 ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக வெளியான செய்தியை அடுத்து இஸ்ரேல் முழுவதும் சீற்றத்தையும் ஆர்ப்பாட்டங்களையும் கிளப்பியுள்ளது என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண்கள் பலர் இருந்த ஒரு ஹோட்டல் படுக்கையறைக்கு வெளியே சிறுமியை தங்கள் போதைக்காக பயன்படுத்த எப்படி வரிசையில் நின்றனர் என்பதை ஊடக அறிக்கைகள் விவரித்ததை அடுத்து பல நகரங்களில் மக்கள் கோபத்துடன் வீதியில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர் என்று டெய்லி மெயில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனால் ஹோட்டலின் உரிமையாளர், அவ்வாறு நடந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.

செங்கடல் ஹோட்டலின் பாதுகாப்பு கேமரா காட்சிகள் அனைத்தையும் போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும், அது 30 பேர் கொண்ட எந்தக் குழுவையும் காட்டவில்லை என்றும் உரிமையாளர் உள்ளூர் தொலைக்காட்சி சேனலிடம் தெரிவித்தார். இதற்கிடையில், சம்பவத்தின் வீடியோவை பாதிக்கப்பட்டவருக்கு அனுப்புவதாக அச்சுறுத்தியதாக 27 சந்தேக நபர்கள் மற்றும் 27 வயதுடைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் இப்போது மருத்துவ பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க போலீசார் சிறப்பு குழுவை அமைத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் கடந்த வாரம் ஈலாட்டில் போலீசாரிடம் முதலில் புகார் தெரிவித்ததாக கூறியிருந்தார். ஆனால் இந்த வழக்கு முன்னர் பெரிதும் கவனிக்கப்படவில்லை.

மேலும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்ததும், வியாழக்கிழமை மாலை பெரிய நகரங்களான டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் நடந்த ஆர்ப்பாட்டங்கள், ஜனாதிபதி ருவன் ரிவ்லின் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட இஸ்ரேலிய தலைவர்களை பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக பேச தூண்டியது.

“இது அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு வேறு வார்த்தை இல்லை” என்று கூறிய நெத்தன்யாகு, சந்தேக நபர்கள் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

“இது ஒரு இளம் பெண்ணுக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல, இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகும். இது நம் அனைவரிடமிருந்தும் கண்டனத்திற்கு தகுதியானது.” என அவர் மேலும் கூறினார்.

நாட்டின் இளைஞர்களுக்கு உரையாற்றிய ஒரு திறந்த கடிதத்தில், ஜனாதிபதி ரிவ்லின், “பாலியல் வன்கொடுமை, கற்பழிப்பு, பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் வன்முறை என இவையனைத்தும் நீக்க முடியாத சில கறைகள். இவை மன்னிக்க முடியாத எல்லைகளை இழந்த வழக்குகள். அவை மனித சமூகத்தையே அழிக்க வல்லது.” எனத் தெரிவித்தார்.

இரண்டு பெரிய நகரங்களைத் தவிர, கிவடாயிம், ஹைஃபா மற்றும் நாடு முழுவதும் சுமார் 30 இடங்களில் எதிர்ப்புக்கள் வெடித்தன. எதிர்ப்பாளர்கள் “நாங்கள் இனி அமைதியாக இருக்க மாட்டோம்” என்ற பதாகையை ஏந்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மகளிர் உரிமைகள் குழுவான ஹாஸ்டிக்கேரியட்டின் இலானா வெய்ஸ்மான் தனது வாழ்நாளில் ஐந்து இஸ்ரேலிய பெண்களில் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படுதாகக் கூறினார்.

Views: - 51

0

0