இந்த சாமியாரை பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. எத்தன பெண்களை ஏமாற்றியிருக்கார் பாருங்க..

13 January 2021, 9:04 am
Quick Share

பெண்களை ‘பூனைக்குட்டிகள்’ என வர்ணித்து, தனக்கு ஆயிரம் காதலிகள் இருப்பதாக கூறி, அவர்களை பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்திய போலி சாமியாருக்கு 1,075 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

துருக்கி நாட்டை சேர்ந்தவர் அட்னன் ஒக்தர் (வயது 64). மதத் தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒக்தர், பல ஆண்டுகளாக பெண்களுனை் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து புகார் எழுந்த நிலையில், வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி, இவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். வழக்கு விசாரணையின் போது, கோர்ட்டில் நீதிபதிகளிடம் அவர் கூறியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

நீதிபதிகளிடம், பெண்கள் மீது எனக்கு அளவு கடந்த ஈர்ப்பு உள்ளது. அந்த அன்பு தான் மனித பண்பு. எனக்கு ஆண்மை அதிகம். அதனால், எனக்கு ஆயிரம் காதலிகள் உள்ளனர் என தெரிவித்து நீதிபதிகளை அதிர வைத்தார். மேலும், எப்போதும் தன்னை சுற்றியிருக்கும் பெண்கள் குறித்து தெரிவித்த அவர், ‘பூனைக்குட்டிகள்’ என தெரிவித்து, அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர்.

அவரது ஆசை வலையில் சிக்கிய பெண்கள் பலரும், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளனர். மேலும், உடலுறவு கொண்ட பெண்களை கட்டாயப்படுத்தி கருத்தடை மாத்திரைகளை முழுங்க வைத்துள்ளார். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 69 ஆயிரம் கருத்தடை மாத்திரைகளை போலீசார் கைபற்றி உள்ளனர்.

விசாரணை முடிவில் தீரப்பளித்த நீதிபதிகள், பாலியல் வன்கொடுமை, சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தல், மோசடி மற்றும் அரசியல் மற்றும் ராணுவ உளவு முயற்சிகள் உள்ளிட்ட குற்றங்களுக்காக அவருக்கு 1,075 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தனர்.

Views: - 7

0

0