வாள் ஏந்தி கேக் வெட்டிய எலிசபெத் மகாராணி: வைரலாகும் வீடியோ…!

13 June 2021, 10:56 pm
Quick Share

ஜி7 மாநாட்டு நிகழ்வில் பிரிட்டன் நாட்டில் அரச குடும்பத்தை சார்ந்த 95 வயதான மகாராணி இரண்டாம் எலிசபெத் வாள் ஏந்தி கேக் வெட்டிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

ஜி7 கூட்டமைப்பின் 47வது உச்சி மாநாடு, பிரிட்டனின் கார்ன்வால் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தும் கலந்து கொண்டார். அவருடன் இளவரசர் சார்ல்ஸ், அவரது மனைவி கெமில்லா மற்றும் பேரன் வில்லியம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.கணவர் ஃபிலிப் மறைவுக்குப் பிறகு, குடும்பத்துடன் இங்கிலாந்து ராணி கலந்து கொள்ளும் முதல் நிகழ்வு இதுவாகும்.இந்த நிகழ்வின் ஒருபகுதியாக நடைபெற்ற கொண்டாட்டதில் மகாராணி எலிசபத் கேக் வெட்டியுள்ளார். வழக்கத்துக்கு மாறாக வாள் கொண்டு கேக்கை வெட்டியுள்ளார்.

ராணி வாள் கொண்டு வெட்ட முயன்ற போது கத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “இது கொஞ்சம் வித்தியாசமானது” என ராணி தெரிவித்துள்ளார். அதை கேட்டு அங்கு குழுமியிருந்த பலரும் சிரித்து மகிழ்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் அவரது பிறந்தநாளை கொண்டாட ராணி தவறிய நிலையில் இந்த நிகழ்வை ராணியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒன்றாகவே கருதுகின்றனர் பிரிட்டன் மக்கள். கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

Views: - 312

0

0