சுலோவாக்கியா பிரதமருக்கு குடை பிடித்த பிரான்ஸ் அதிபரின் வியக்க வைத்த பண்பு: வைரலாகும் வீடியோ..!!
6 February 2021, 5:11 pmபாரிஸ்: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சுலோவாக்கியா பிரதமருக்கு குடை பிடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரான்சுக்கு வருகை தந்த சுலோவாக்கியா பிரதமர் இகோர் மாடோவிக் , பிப்ரவரி 3ம் தேதி அதிபர் மேக்ரானை சந்திக்க எலிசி அரண்மனைக்கு வந்தார். இகோர் மாடோவிக்கை மேக்ரான் வரவேற்றதை அடுத்து இருவரும் அரண்மனைக்கு வெளியே செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டனர். இருவரும் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது மழை பெய்யத்தொடங்கியது. உடனே பெண் உதவியாளர் ஒருவர் வந்து பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு ஒரு கருப்பு குடையை வழங்கினார்.
மேக்ரான் அதை சுலோவாக்கிய பிரதமருக்கு பிடித்தார். இரண்டாவது பெண் உதவியாளர் வந்து மேக்ரானுக்கான குடையை முதலில் வந்த பெண் உதவியாளிரிடம் கொடுத்தார். அவர் அதை மேக்ரானுக்கு பிடித்தார். இரண்டாவது பெண் உதவியாளர் மேக்ரான் பிடித்திருந்த குடையை வாங்க முன்வந்தார், ஆனால் அவசியமும் இல்லை என்று அவரிடம் மேக்ரான் சைகை காட்டினார். இரண்டு பேரும் செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு, எலிசி அரண்மனைக்குள் செல்ல திரும்பியபோது, ஒரு இராணுவ உதவியாளர் அணுகி, மேக்ரானிடம் குடையை வாங்க முன்வந்தார்.மேக்ரான் அவரிடமும் குடையை வழங்காமல் தொடர்ந்து இகோர் மாடோவிக்கு தானே குடை பிடித்தார்.
மீண்டும் இரண்டாவது பெண் உதவியாளர் திரும்பி வந்து குடையை வாங்க முன்வந்தார், ஆனால் மேக்ரான் மீண்டும் தராமல் விலகிக் கொண்டார்.அரண்மனைக்கு உள்ளே செல்லும் வழியில் உள்ள படிகளின் உச்சியில் ஏறியபோது மேக்ரான் அந்த குடையை இகோர் மாடோவிக்கிடமே வழங்கி முகக்கவசம் போட்டுக்கொண்டார். அங்கிருந்த உதவியாளர்களில் ஒருவர் உடனே இகோர் மாடோவிக்கிடமிருந்த குடையை வாங்கிக்கொண்டார். யாரிடமும் தராமல் மேக்ரான் சுலோவாக்கியா பிரதமர் இகோர் மாடோவிக்கு குடை பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
0
0