ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தலைவரை போட்டுத் தள்ளிய அமெரிக்க ராணுவம்..! பிடென் பதவியேற்புக்கு பின் நடந்த முதல் தாக்குதல்..!

30 January 2021, 11:35 am
ISIS_UpdateNews360
Quick Share

அமெரிக்காவின் தலைமையிலான படைகள் ஈராக்கின் கிர்குக்கில், உயர்மட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவரை வான்வழித் தாக்குதலில் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஜோ பிடென் அதிபராக பதவியேற்ற பிறகு, பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட முதல் மிகப்பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க மற்றும் ஈராக் படைகளின் கூட்டுப் பணியில் அபு யாசர் என அழைக்கப்படும் ஜபார் சல்மான் அலி ஃபர்ஹான் அல்-இசாவி கொல்லப்பட்டார் என்று ராணுவம் அறிவித்துள்ளது.

அவர் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, நாடு முழுவதும் உள்ள குழுவின் போராளிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியதாக நம்பப்படுகிறது.

இந்த மாதம் பாக்தாத்தில் நடந்த இரட்டை தற்கொலை குண்டுவெடிப்பின் பின்னர், பயங்கரவாதத்திற்கு எதிராக தாக்குதலை அமெரிக்கா தலைமையிலான ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

அபு யாசரின் மரணம் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் மீண்டும் எழுச்சி பெறும் முயற்சிகளுக்கு மற்றொரு குறிப்பிடத்தக்க அடியாகும் என்று ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் வெய்ன் மரோட்டோ கூறினார்.

முன்னதாக, கடந்த வாரம் பாக்தாத்தில் 32 பேர் கொல்லப்பட்ட இரட்டை தற்கொலை குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்றுள்ளது. இது நான்கு ஆண்டுகளில் ஈராக் தலைநகரில் நடந்த கொடூர தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 23

0

0