உய்குர் முஸ்லீம்கள் இன அழிப்பு..! ஐநா பாதுகாப்பு அவையில் மூக்குடைந்த சீனா..!

26 August 2020, 6:51 pm
Xinjiang_Genocide_UpdateNews360
Quick Share

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகியவை சீனாவை மீண்டும் மூக்குடைத்துள்ளது. வடமேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில் உய்குர் சிறுபான்மையினர் மீது சீனா துஷ்பிரயோகம் செய்யும் நிலையில், அரசியல் கருத்து வேறுபாட்டை முடக்குவதற்கு ஒரு சாக்குப்போக்காக பயங்கரவாத எதிர்ப்பு எனும் சொல்லை பயன்படுத்த வேண்டாம் என்று ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் 3 நாடுகளும் சீனாவிடம் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி கெல்லி கிராஃப்ட், “ஜின்ஜியாங்கின் நிலைமை குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். அங்கு பயங்கரவாத எதிர்ப்பு என்ற போர்வையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர்களும் பிற முஸ்லிம்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

“பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்ப்பது என்ற போர்வையில் ஒருபோதும் அரசியல் எதிர்ப்பை அல்லது கருத்து சுதந்திரத்தை முடக்குவதற்கோ அல்லது மத சுதந்திரத்தை மீறுவதற்கோ அல்லது சிறுபான்மை குழுக்களை அடக்குவதற்கோ ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்தப்படக்கூடாது” என்று கெல்லி கிராஃப்ட் மேலும் கூறினார்.

ஐ.நா.வுக்கான இங்கிலாந்தின் தூதர் ஜேம்ஸ் ரோஸ்கோ, “உய்குர்கள் மற்றும் பிற இன சிறுபான்மையினருக்கு எதிரான முறையான, மிக மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து நாங்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

“பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் ஒருபோதும் மனித உரிமை மீறல்களுக்கு ஒரு சாக்குப்போக்காக செயல்படக்கூடாது” என்று ஜெர்மனி கூட்டத்தில் கூறியது.

ஜெர்மனியின் தூதர் குண்டர் சாட்டர், “ஜின்ஜியாங்கைப் பொறுத்தவரை, மக்கள்தொகையின் பெரும்பகுதியை தடுத்து நிறுத்துவது நியாயமற்றது. நீண்ட காலமாக, இது குறைக்கப்படுவதில்லை, மாறாக பயங்கரவாத அமைப்புகளின் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹாங்காங் தொடர்பான புதிய பாதுகாப்புச் சட்டம் காரணமாக முதன்முறையாக ஐக்கிய நாடுகள் சபையில், பாதுகாப்பு அவையின் மூடிய கதவு சந்திப்பில் ஹாங்காங் பிரச்சினை எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 40

0

0