விடாமல் துரத்திய கரடி; தப்பிய பனிச்சறுக்கு வீரர்! வைரல் வீடியோ

Author: Poorni
14 March 2021, 11:15 am
Quick Share

ருமேனியா நாட்டில் பனிச்சறுக்கில் ஈடுபட்ட வீரர் ஒருவரை, பழுப்பு நிற கரடி ஒன்று விடாமல் துரத்த, அதன் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த ஜனவரி மாதம், ருமேனியாவின் பிரிடில் மலை ரிசார்டில் பனிச்சறுக்கு வீரர் ஒருவரை கரடி ஒன்று துரத்தியது. சாய்லிப்டில் பயணித்த சுற்றுலா குழுவினர், அதனை வீடியோவாக எடுத்ததுடன், ‘‘திரும்பி பார்க்காதே.. வேகமாக போ.. கரடி ஒன்று உன்னை விடாமல் துரத்தி வருகிறது’ என கத்தி கூச்சல் போட்டனர். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி இருந்தது.

இந்நிலையில், இதைப்போன்றதொரு மற்றொரு சம்பவம் ருமேனியாவில் நடந்துள்ளது. பனிச்சறுக்கு வீரர் ஒருவரை குறிவைத்து பல கிலோ மீட்டர் தூரம் அந்த கரடி துரத்தி வருகிறது. மத்திய ருமேனியாவில் உள்ள மலைவாசஸ்தலங்களில் ஒன்றான ப்ரீடீல் நகருக்கு அருகே உள்ள பனிச்சறுக்கு பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது. கரடி அவரை துரத்துவதற்கு முன்னர், பல நிமிடங்கள் அவரது குழுவை பின்தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

வீடியோ துவங்கும் போது, பழுப்பு நிற கரடி ஒன்று, பனிச்சறுக்கு பகுதியை ஒட்டிய காடுகளில் உலாவுகிறது. பின் மெல்ல பனிச்சறுக்கு பகுதிக்கு வரும் கரடி, பனிச்சறுக்கு வீரர் ஒருவரை நெருங்குகிறது. கரடி நெருங்குவதை அறிந்த அவர், தன் கையில் இருந்த பையை கரடியை நோக்கி எறிந்து அதனை திசைதிருப்புகிறார்.

போதுமான நேரம் கிடைத்தவுடன், அங்கிருந்து பள்ளமான பகுதியில் பனிச்சறுக்கு செய்கிறார். அவரை அங்கிருந்து துரத்த துவங்கும் கரடி, பல கிலோ மீட்டர் துரத்தி வருகிறது. இதனை தன்னிடமிருந்த கேமராவில் பதிவு செய்த அந்த பனிச்சறுக்கு வீரர், சமூக வலைதளங்களில் வெளியிட அது வைரலானது. நாய் துரத்தினாலே மரண பீதியில் பைக்கை வேகமெடுக்கும் நமக்கெல்லாம், இது சாதாரணம் என்கிறீர்களா..?

Views: - 173

0

0