சீனாவுடனான ஹம்பன்தோட்டா துறைமுக ஒப்பந்தம் மிகப்பெரும் தவறு..! இந்தியாவே முக்கியம் என அறிவித்த இலங்கை..!

26 August 2020, 4:39 pm
Hambantota_Port_UpdateNews360
Quick Share

இலங்கை ஒரு நடுநிலை வெளியுறவுக் கொள்கையைத் தொடர விரும்புகிறது. ஆனால் மூலோபாய மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் “இந்தியா முதல்” அணுகுமுறையைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று வெளியுறவு செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொலைக்காட்சி சேனலுடன் பேசிய கொலம்பேஜ், “ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே அரசு மூலோபாய பாதுகாப்பைப் பொறுத்தவரை, நாங்கள் ‘இந்தியா முதல்’ கொள்கையைப் பின்பற்றுவோம் என்று கூறியுள்ளார். இந்தியாவுக்கு ஒரு மூலோபாய பாதுகாப்பு அச்சுறுத்தலாக நாங்கள் இருக்க முடியாது. நாங்கள் அவ்வாறு இருக்க வேண்டியதில்லை.

நாம் இந்தியாவிலிருந்து பயனடைய வேண்டும். பாதுகாப்பைப் பொருத்தவரை நீங்கள் எங்கள் முதல் முன்னுரிமை என்று ஜனாதிபதி தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால் பொருளாதார செழிப்புக்காக நான் மற்ற நாடுகளையும் சமாளிக்க வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.” என்று தெரிவித்தார். 

நடுநிலை வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவதோடு, இலங்கை இந்தியாவின் மூலோபாய நலன்களைப் பாதுகாக்கும் என்றும் அவர் கூறினார். தனது கருத்துக்களில், வெளியுறவு செயலாளர், ஹம்பன்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு சீனாவுக்கு வழங்குவதற்கான முடிவு ஒரு மிகப்பெரும் தவறு என்று கூறினார்.

தேர்தலில் ராஜபக்சே அணி மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்த பின்னர், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சமீபத்தில் இலங்கை வெளியுறவு அமைச்சரான தினேஷ் குணவர்த்தனிடம் பேசியுள்ளார்.

ராஜபக்சே அரசாங்கம், கடந்த காலங்களில் இந்தியாவை விட சீனாவுடன் நெருக்கமாக காணப்பட்டது. ஆனால் இந்தியாவில் மோடி பொறுப்பேற்ற பின் ராஜபக்சே குடும்பம் விரட்டியடிக்கப்பட்டு பின் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின், சீன அரசாங்கத்துடனான நெருக்கத்தைக் குறைத்து இந்தியாவுடன் இணக்கமான போக்கைக் கடைபிடிப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 28

0

0