ஏமாற்றிய காதலனை வச்சு செஞ்ச காதலி! இப்படி எல்லாமா பழி வாங்குவாங்க

23 January 2021, 10:20 am
Quick Share

தன்னை ஏமாற்றிய காதலனை பழிவாங்கும் விதத்தில், தன்னிடமிருந்த காதலனின் அமேசான் அக்கவுண்டை வைத்து, சீட்டர், லையர், அன்வொர்த்தி போன்ற தலைப்புகளில் இருக்கும் படங்களை வாங்கி பழிவாங்கி உள்ளார் அந்த காதலி. இப்படி எல்லாமா செய்வாங்க..

பிரிட்டனை சேர்ந்த நாதன் ஸ்மித் மற்றும் லவுரன் லில்லி, இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். தன் காதலன் மீது உயிரையே வைத்திருந்திருக்கிறார் லில்லி. ஆனால் லில்லியின் தோழிகள் ஸ்மித் நல்லவர் இல்லை எனவும், அவரை விட்டு பிரிந்து விடும் படியும் வற்புறுத்தி வந்திருக்கின்றனர். ஆனால் காதல் கண்ணை மறைக்க, அதனை கேட்கும் மனநிலையில் இல்லாத லில்லி, தொடர்ந்து காதலில் திளைத்திருந்திருக்கிறார். நாளாக நாளாக, காதலனின் நடவடிக்கையில் மாற்றம் வந்திருக்கிறது.

ஸ்மித் தூங்கிய போது, அவரது மொபைல் போனை எடுத்து பரிசோதித்து பார்த்ததில், அவர் மற்றொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்தது கண்டு அதிர்ந்திருக்கிறார் லில்லி. இதுகுறித்து ஸ்மித்திடம் வாக்குவாதம் செய்து, அது உண்மை தான் என தெரிந்ததும், அவரை விட்டு பிரிந்துவிட்டார். காதலனை நினைத்து, தினமும் கண்ணீரும் கம்பளையுமாக நாட்களை கடத்தி வந்த லில்லி, அவரை பழிவாங்க சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார்.

அப்போது தான், ஸ்மித்தின் அமேசான் அக்கவுண்ட் தன்னிடம் இருப்பதை ஞாபகப்படுத்தி அவரை பழிவாங்க அதனை ஒரு கருவியாக மாற்றியிருக்கிறார். அமேசானில் துரோகம் என பெயர் வரும் வகையில் இருக்கும், சீட்டர், டிசைட்புல், தி அன்வொர்த்தி, லையர் என ஆங்கிலம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலிலும் இருக்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை 500 டாலருக்கு வாங்கி குவித்து விட்டார். திடீரென தனது அக்கவுண்டில் இருந்து பணம் குறைவதை கண்ட ஸ்மித், லில்லிக்கு கால் செய்து பேசியிருக்கிறார்.

அவருடன் சண்டையிட்ட லில்லி, நல்ல பெண்களின் வாழ்க்கையில் விளையாடாதே. நீ செய்த தவறுக்கு உனக்கு இது தான் தண்டனை என கத்திவிட்டு போனை வைத்துள்ளார். அப்போது தான் அவரது மனம் சிறிது அமைதி அடைந்திருக்கிறது. காதலனை பழிவாங்க இவர் செய்த காரியம் தற்போது நாளிதழ்களில் போடும் அளவுக்கு வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. நல்லா பழிவாங்குராங்கப்பா…

Views: - 3

0

0