உலக வங்கியுடன் ஒரு பில்லியன் டாலர் கடன் ஒப்பந்தம் கையெழுத்து..! முடங்கிய பொருளாதாரத்தை மீட்கும் பாகிஸ்தான்..!

Author: Sekar
27 March 2021, 5:52 pm
Imran_khan_UpdateNews360 (2)
Quick Share

மிக மோசமான பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பை உயர்த்துவதற்கும், சமூக நலத் திட்டங்களுக்கு உதவுவதற்கும் 1.336 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை வழங்க உலக வங்கி பாகிஸ்தானுடன் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு, பேரழிவு மற்றும் காலநிலை இடர் மேலாண்மை, மீள்நிலை, வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரிப்பதற்காக 128 மில்லியன் அமெரிக்க டாலர் மானியம் உட்பட 1.336 பில்லியன் அமெரிக்க டாலர் கடன்கள் வழங்குவதற்கான மொத்தம் ஆறு திட்ட ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்திடப்பட்டன.

பாகிஸ்தான் பொருளாதார விவகார அமைச்சகத்தின் செயலாளர் நூர் அகமது, பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பாக நிதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். அதே நேரத்தில் சிந்து, கைபர் பக்துன்க்வா மற்றும் பலூசிஸ்தான் மாகாண அரசாங்கங்களின் பிரதிநிதிகள் அந்தந்த ஒப்பந்தங்களில் ஆன்லைனில் கையெழுத்திட்டனர்.

உலக வங்கியின் பாகிஸ்தான் இயக்குநர் நஜி பென்ஹாசின் தனது அமைப்பு சார்பாக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இந்த விழாவில் பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் குஸ்ரோ பக்தியாரும் கலந்து கொண்டார்.

இதே போல், சர்வதேச நாணய நிதியமும் (ஐ.எம்.எஃப்) பாகிஸ்தானுக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை விடுவிக்க ஒப்புக்கொண்டது.

இந்தியாவுக்கு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்துவரும் பாகிஸ்தான் மீது, கடந்த சில வருடங்களாவே இந்தியா, எப்ஏடிஎப் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் பொருளாதார ரீதியாக கடும் தடைகளை ஏற்படுத்தி வருவதால், பாகிஸ்தான் பொருளாதாரம் முடங்கியது. மேலும் சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா மிக நெருக்கம் காட்டி வரும் நிலையில், இந்த இரு நாடுகளும் பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதை நிறுத்தி, முன்னர் வழங்கிய கடனையும் திருப்பிச் செலுத்த வலியுறுத்தியது.

சீனாவிடம் தொடர்ந்து கடன் வாங்கி வந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல், பாகிஸ்தானை நிலைமையைச் சமாளிக்க முடியாமல் முற்றிலும் திவாலாகிப் போனதோடு, தேசிய உயிரியல் பூங்காவை விற்கும் நிலைக்குச் சென்றது.

இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவுடனான மோதலைக் கைவிட்டு, அமைதியைப் பேணுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியம், உலக வாங்கி போன்றவை கடன் தருவதாக அறிவித்துள்ளது பாதுகாப்பு வல்லுனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Views: - 83

0

0