ராஜபக்சேவை சந்திக்கும் நடிகர் விஜய்?.. தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்ளும் தளபதி..!

Author: Vignesh
9 February 2024, 12:52 pm
vijay
Quick Share

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். கடந்த சில வருடங்களாகவே அரசியலில் நுழைவார் என்ற பேச்சு அடிப்பட்ட போது அவர் இதை மறுக்கவில்லை. விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு அவர் தனது ரசிகர்கள் மூலம் செய்து வந்தார்.

இதையடுத்து, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சி பெயரை பதிவு செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Vijay

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் தமிழ்நாட்டில் எகிறி வருகிறது. நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளின் லிஸ்ட் விஜய் மேஜையில் இருப்பதாகவும் சாதக, பாதகங்களை ஆராய்ந்து அவர் களமிறங்குவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விஜய் இன்னும் நாட்களை கழிக்காமல் சூட்டோடு சூடாக உடனே இப்போதே அரசியலுக்கு வர வேண்டும் என அவரது நலன் விரும்பியாக அறியப்படும் பழ.கருப்பையா வலியுறுத்தி வருவது கவனிக்கத்தக்கது. இதனால், எப்படி பார்த்தாலும் இன்னும் 6 மாதங்களில் விஜய்கள் அரசியலுக்கு வந்துவிடுவார். மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay - Updatenews360

அதேபோல், தமிழக வெற்றி கழகம் சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள். இப்போதே அவரவர் பகுதிகளில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க ஆரம்பித்துள்ளனர். இதனால், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு விஜயின் வருகையால் தமிழக அரசியல் களம் அனல் பறக்கும் எனத் தெரிகிறது.

Vijay - Updatenews360

இந்நிலையில், கோட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. படப்பிடிப்பிற்காக இலங்கை செல்ல இருக்கும் விஜய்யுடன் ராஜபக்சே சந்திப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ராஜபக்சேவின் மகன் விஜய்க்கு நெருங்கிய நண்பராம். அதனால், இவர்கள் சந்திப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ராஜபக்சே குடும்பம் தமிழர்களின் கடும் வெறுப்பை சம்பாதித்து இருக்கிறது. அதனால், விஜய் இந்த விஷயத்தில் யோசித்து தான் செயல்பட வேண்டும். இல்லை என்றால் தலையில் மண்ணை வாரி போட்டது போல் தளபதியின் நிலை ஆகிவிடும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 142

0

0