வேஷ்டி சட்டையில் மாஸ்டர் பொங்கல் கொண்டாடிய தளபதி விஜய்: வைரலாகும் வீடியோ!

15 January 2021, 4:15 pm
Quick Share

தளபதி விஜய் மாஸ்டர் படக்குழுவினருடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் நடித்த மாஸ்டர் படம் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு பல பிரச்சனைகளைக் கடந்து திரைக்கு வந்துள்ளது. திரைக்கு வருவதிலும் சிக்கலை சந்தித்துள்ளது. ஆம், வெறும் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், மாஸ்டர் படம் வெற்றி வாகை சூடிக்கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராகவும், சீர்திருத்த பள்ளியில் வாத்தியாகவும் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி வில்லனாக தனது ஆக்‌ஷன் அவதாரத்தை காட்டியுள்ளார். ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் என்ற டயலாக் இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு பொருந்தும். அந்தளவிற்கு தனது வில்லத்தனத்தை நகைச்சுவை உணர்வோடு காட்டியிருக்கிறார்.
மேலும், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தணு, சஞ்சீவ், ஸ்ரீமன், பிரேம்குமார், ரம்யா சுப்பிரமணியன், பிரிகிதா, கௌரி கிஷான் என்று ஏராளமான பிரபலங்கள் படத்தில் வலம் வந்துள்ளனர். மாஸ்டர் பாதி பாதி படம் தான்.

அதாவது விஜய்க்கு பாதி, லோகேஷ் கனகராஜுக்கு பாதி என்றே கூறலாம். கல்லூரி கதை விஜய்க்குரியது. லாரி, இருட்டு, வாளி, சீர்திருத்த பள்ளி எல்லாம் இயக்குனருக்குரியது. எனினும், எங்கும் பிசிரு இல்லாமல் கச்சிதமாக பக்காவாக வெற்றி வாகை சூடிக்கொண்டிருக்கிறது. மாஸ்டர் வெளியான முதல் 2 நாட்கள் தமிழகத்தில் மட்டும் ரூ.25 கோடி, ரூ.40 கோடி என்று வசூல் குவித்துள்ளது. இது தவிர மற்ற மாநிலங்கள், வெளிநாடுகள் என்று மாஸ்டர் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வருகிறது.


ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள், இயக்குநர்கள் என்று அனைவருமே மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் கண்டு ரசிக்கின்றனர். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் படம் வெளியாகியுள்ள நிலையில், மாஸ்டர் படக்குழுவினர் அனைவரும் பொங்கல் கொண்டாடிய வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு மாஸ்டர் படப்பிடிப்பின் போது படக்குழுவினர் அனைவரும் மாஸ்டர் பொங்கல் வைத்து கொண்டாடியுள்ளனர்.

இதில், தளபதி விஜய் வேஷ்டி சட்டை அணிந்து வந்து பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 37

0

0