உண்மையிலே நான் உங்களுக்கு தான் பிறந்தேனா..? பெற்றோர்களுடன் சண்டையிட்ட சாய்பல்லவி!

Author: Rajesh
19 December 2023, 7:57 pm

நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு . இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி. அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.

இந்நிலையில் சாய்பல்லவி மிகவும் வெள்ளை நிறத்தில் இருப்பதால் அவரது தாய் தந்தையிடம் சண்டையிட்டாராம். காரணம் அவர்கள் இருவரும் மாநிறம் என்பதால் ” உண்மையிலே நான் உங்களுக்கு தான் பிறந்தேனா? அல்லது என்னை தத்தெடுத்து வளர்த்தீர்களா? என கேட்டு வாக்குவாதம் செய்தாராம். பின்னர் நீயும் தங்கையும் ஒரே முகஜாடையில் தானே இருக்கிறீர்கள் என எடுத்து சொல்லி சமாளிப்பார்களாம்.

  • Kamal haasan decided to not act in other companies இதுதான் என்னோட கடைசி படம்-திடீர் முடிவெடுத்த கமல்ஹாசன்? பகீர் கிளப்பும் தகவல்…