இல்லாத மரியாதையை தேடாதீர்கள்.. அந்த படத்துல நடிச்சா இப்படித்தான்.. செல்வராகவனை கேலி செய்யும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
15 May 2023, 7:30 pm

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன் தற்போது நடிகராக கலக்கி வருகிறார். சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அண்ணனாக நடிப்பில் மிரட்டி இருப்பார். இந்த படம் அவருக்கு நடிகராக நல்ல பெயரை பெற்று தந்தது.

selvaraghavan-STALIN. updatenews360 (1)

இதேபோன்று விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் முக்கிய கேரக்டரில் செல்வராகவன் நடித்திருந்தார். அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது இந்த நிலையில் இயக்குனர் மோகன். ஜி இயக்கத்தில் தற்போது ‘பகாசுரன்’ என்ற படத்தில் செல்வராகவன் நடித்து தற்போது திரைக்கு வந்துள்ளது.

இயக்குநராக கலக்கிய செல்வராகவன் தற்போது நடிகராகவும் கலக்கி வருகிறார். செல்வராகவனுக்கு திரையில் எப்படி ரசிகர்கள் உண்டோ அதேபோல் அவரின் தத்துவ ட்வீட்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. திடீரென வந்து தத்துவத்தை தூவிவிட்டு சென்றுவிடுவார்.

இந்நிலையில், நடிகராக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் செல்வராகவன் அடுத்ததாக தன்னுடைய இயக்கத்தில் எந்த படத்தை இயக்க போகிறார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

selvaraghavan-STALIN. updatenews360 (1)

இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன் ஏதாவது ஒரு கருத்தினை மறைமுகமாக தெரிவிப்பது வழக்கம். அந்தவகையில், செல்வராகவன் தற்போது இல்லாத மரியாதையை தேடாதீர்கள் என்ற பதிவை பகிர்ந்து உள்ளார். இந்த பதிவினை பார்த்த நெட்டிசன்கள் பகாசுரன் படத்தில் நடிச்சா இப்படித்தான் என்று அந்த படத்தின் இயக்குனரை வைத்து கேலி செய்து வருகின்றனர்.

  • Shibitha Shivanna found dead பிரபல நடிகை வீட்டில் மர்ம மரணம்? கொலையா? தற்கொலையா?
  • Views: - 558

    1

    1