சீறும் காளையாக வந்த வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் !

16 July 2021, 5:46 pm
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் வெற்றிமாறன். தனுஷ் நடிப்பில் வந்த பொல்லாதவன் படத்தின் மூலமாக தன்னை ஒரு இயக்குநராக காட்டியவர் வெற்றிமாறன். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆடுகளம், நான் ராஜாவாபோகிறேன், விசாரணை, வட சென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இதில், பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்கள் தனுஷ் நடித்த படங்கள். விரைவில் வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை 2 படமும் உருவாக இருக்கிறது. தற்போது சூரி ஹீரோவாக நடித்து வரும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா வாடிவாசல் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயா‌ரிக்கிறார். போன வருடமே இதற்கான அறிவிப்புகள் வெளியான நிலையில் கொரோனா காரணமாக அப்டேட் எதுவும் வெளிவரவில்லை. தற்போது வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் இப்போது சீறும் காளையாக வெளியாகியுள்ளது. மாஸ் இயக்குனர் வெற்றிமாறன், நடிப்பு அரக்கன் சூர்யாவும் இணைவதால் First Look மீது எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.

Views: - 931

40

1